இழுபறி.. Exit Poll முடிவுகள் கொடுத்த நம்பிக்கை.. “ரிசல்ட் மாறும்”.. உற்சாகமாக பேசும் பாஜக தலைவர்கள்!
பெங்களூர் : கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பலர் காங்கிரஸ் வெற்றி பெறும் எனத் தெரிவித்திருந்தாலும் சில முக்கிய நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் பாஜக வெல்லும் எனத் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பாஜக பெரும்பான்மையுடன் வெல்லும் என பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு முடிந்துள்ளது. ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டதால் மும்முனை போட்டி நிலவுகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என பல கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. அதேசமயம், பாஜகவுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக சில கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன.
எக்ஸிட் போல் ரிசல்ட்ஸ் : 113 என்ற மேஜிக் நம்பரை யார் பெறுகிறார்களோ, அவர்கள்தான் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க முடியும். ஆனால், பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் இந்த நம்பரை எட்டுவதில் இழுபறி நிலவுவதாகவே தெரிகிறது.
டிவி 9 - சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்புகளின்படி காங்கிரஸ் 112 இடங்களை கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 83 - 95 தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேடிஎஸ் 21 - 29 தொகுதிகளில் வெற்றி வாகை சூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு சாதகம் : இதில் சுவர்னா நியூஸ் - ஜன் கி பாத், போல்ஸ்ட்ராட், ராஜ்நீதி, நியூஸ் நேஷன் -சி.ஜி.எஸ் ஆகிய நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக உள்ளன.
பாஜக 94 முதல் 117 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என ஜன் கி பாத் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 91 முதல் 106 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 14 முதல் 24 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
முந்தும் பாஜக: போல்ஸ்ட்ராட் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 99-109 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. காங்கிரஸ்-88-98, மதச்சார்பற்ற ஜனதா தளம்-21-26 இடங்கள் பெற வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நியூஸ் நேஷன் -சி.ஜி.எஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 114 இடங்களையும், காங்கிரஸ் 86 இடங்களையும் ஜேடிஎஸ் 21 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்நீதி வெளியிட்டுள்ள தேர்தலுலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, பாஜக 100 இடங்களையும், காங்கிரஸ் 92 இடங்களையும், ஜேடிஎஸ் 31 இடங்களையும், மற்றவை 1 இடத்தையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஜேபி நம்பிக்கை : இவ்வாறு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு ரிசல்ட் வெளியாகி வரும் நிலையில், பாஜக தலைவர்கள், ரிசல்ட் மாறும், பாஜக நிச்சயம் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
பாஜக உறுதியான பெரும்பான்மையை எதிர்பார்க்கிறது, பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் கூறியுள்ளார்.
பாஜக எம்.பி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறுகையில், "கர்நாடகா மக்கள் பாஜகவை ஆசீர்வதிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இவை வெறும் கருத்துக் கணிப்புகள் மட்டுமே, முடிவுகள் பாஜகவுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications