சசிகலா ஜெயிலில் திடீர் பரபரப்பு.. ரவுடி செய்த அந்த துணிச்சலான காரியம்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி!
பெங்களூரு ஜெயிலில் ரவுடி பிறந்த நாள் விழா கொண்டாடி உள்ளார்
பெங்களூரு: பெங்களூரில், சசிகலா இருக்கும் ஜெயிலுக்குள் இருந்து ஒரு பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது.
பெங்களுரூவில் பரப்பன அக்ரஹார மத்திய சிறை கர்நாடக மாநிலத்தில் மிகப்பெரிய சிறைச்சாலை ஆகும்.. இப்போதைக்கு கிட்டத்தட்ட 4,500 குற்றவாளிகள் அங்கு சிறையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
இதில்தான் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவும் தண்டனை பெற்று வருகறிர்.. இவர் விரைவில் விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.... அவரது வருகை அரசியல் உலகில் மிகப்பெரிய பரபரப்பையும், திருப்பத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்று நம்பப்படுகிறது.

ஆனால், அதைவிட ஒரு பரபரப்பு இப்போது அந்த சிறையில் நடந்துவிட்டது.. இந்த ஜெயிலில் ஒரு ரவுடி இருக்கிறார்.. கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளார்.. அவர்தான் இந்த பரபரப்புக்கு காரணம்.
தெற்கு பெங்களூரை சேர்ந்த அந்த ரவுடி பெயர் ரிஸ்வான்.. இவருக்கு குள்ள ரிஸ்வான் என்று இன்னொரு பெயர் உள்ளது.. கொலை தவிர, மற்ற கேஸ்களும் இவர்மீது உண்டு... கடந்த டிசம்பர் 2019 முதல் ஜெயிலில் இருந்து வருகிறது. மேலும், கடந்த அக்டோபர் மாதம் டிசிபி ஹரிஷ் பாண்டே தலைமையிலான போலீசார், குண்டர் சட்டத்தில் ரிஸ்வானை கைது செய்திருந்தனர்.
அதனால், 2021 வரை இவருக்கு ஜாமீனே கிடையாது. ஆனால், இவருக்கு அப்படி எந்த ஒரு கவலையும் இவருக்கு இல்லாமல், தன் பிறந்த நாளை ஜம்மென்று கொண்டாடி இருக்கிறார்.. நண்பர்கள் புடைசூழ ரிஸ்வான் கேக்கை வெட்டி, ஊட்டிவிட்டுள்ளார்.. இதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.. அப்போத ஒரு கன்னட பாட்டு சத்தம் கேட்கிறது.
கேக் வெட்டுவதும், அதை ஊட்டுவதும், வீடியோ எடுத்து, அதனை எடிட் செய்து கிராபிக்ஸ் கலந்து சோஷியல் மீடியாவிலும் வெளியிட்டுள்ளனர்.. இந்த வீடியோதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இதுகுறித்து சிறை நிர்வாகம் சொல்லும்போது, ஜெயிலுக்குள் பிறந்த நாள், பண்டிகைகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அனுமதி உள்ளது. ஆனால், எப்படி, எப்போது விடியோ எடுத்தார்கள், அதை எடிட் செய்து அப்லோடு செய்தார்கள் என்றுதான் தெரியவில்லை என்கிறார்கள்... எனவே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications