Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000.. அடுத்த அதிரடி திட்டம்.. ராகுல் காந்தி வாக்குறுதி

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று ராகுல் காந்தி எம்பி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் தற்போதே அங்கு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் நடந்த மாநாட்டில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று ராகுல் காந்தி எம்பி தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கர்நாடக மாநிலத்தில் தற்போது பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

முதல்வராக பாஜகவின் பசவராஜ் பொம்மை பதவி வகித்து வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டில் அங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. தற்போது கர்நாடக சட்டசபையின் காலம் முடிவுக்கு வர உள்ளது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபை தேர்தல்

கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தற்போது இருந்தே மாநிலத்தில் தேர்தல் ஜூரம் தொடங்கிவிட்டது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும், செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் ஆம்ஆத்மி கட்சியும் களமிறங்க உள்ளது. ஆட்சியை இழந்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக பாஜக உள்ளது. அக்கட்சியின் மேல் மட்ட தலைவர்கள் அடிக்கடி கர்நாடக மாநிலத்திற்கு விசிட் அடித்து வருகின்றனர்.

அடிக்கடி கர்நாடகா வரும் தலைவர்கள்

அடிக்கடி கர்நாடகா வரும் தலைவர்கள்

குறிப்பாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அடிக்கடி கர்நாடகம் வந்து தங்களது கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். பிரதமர் மோடி கடந்த 2 மாதத்தில் 6 முறை கர்நாடகத்திற்கு வருகை தந்துள்ளார். மறுபக்கம் கர்நாடகாவில் இழந்த ஆட்சியை மீண்டும் பிடித்து விட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி தேர்தல் பணியை தொடங்கிவிட்டது.

பட்டதாரிகளுக்கு 3 ஆயிரம் உதவித்தொகை

பட்டதாரிகளுக்கு 3 ஆயிரம் உதவித்தொகை

தேர்தல் தேதி இன்னும் அறிவிக்காத நிலையிலும் கூட வேட்பாளர் பட்டியலை வெளியிட ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் இளைஞர்கள் மாநாட்டில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளையும் வெளியிட்டார். குறிப்பாக கர்நாடகாவில் படித்து வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தோறும் 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதேபோல், டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள்

காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள்

முதல் 2 ஆண்டுகளுக்கு இந்த உதவித் தொகையும் அதன்பிறகு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியையும் அளித்தார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி சார்பில் ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், மாதம் 2 ஆயிரம் ரூபாய் குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ள நிலையில், இன்று கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளித்தார். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே வாக்குறுதிகளை அள்ளி வீசி தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் இறங்கியிருப்பது அங்கு தேர்தல் களத்தை அனல் பறக்க வைத்துள்ளது.

 கர்நாடகாவில் நான்கு முனை போட்டி?

கர்நாடகாவில் நான்கு முனை போட்டி?

கர்நாடகாவில் வரும் சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் மீண்டும் அவர்களுக்கு சீட் கொடுக்கப்படும் என்ற ரீதியில் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஏற்கனவே கூறியுள்ளார். மேலும் தனித்து போட்டியிடும் என்ற நிலைப்பட்டையும் காங்கிரஸ் எடுத்துள்ளது. இதனால், கர்நாடகாவில் நான்கு முனை போட்டி நிலவலாம் என்று தெரிகிறது. எனினும், பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் எனத்தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+