கர்நாடக முதலமைச்சராக “பிராமணர்”.. ஆர்எஸ்எஸ் சதித்திட்டம்! பிரஹலாத் ஜோஷியை இழுத்து விட்ட குமாரசாமி
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை கர்நாடகாவின் முதலமைச்சராக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்து வருவதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்து இருக்கிறார்.
பெங்களூரு: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்து வருவதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி தெரிவித்து இருக்கிறார். கர்நாடகாவில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் குமாரசாமியின் இக்கருத்து விவாத பொருளாகி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசின் பதவிகாலம் நிறைவடைய இருக்கும் நிலையில் இந்த ஆண்டு கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி நேற்று தெரிவித்து இருக்கும் கருத்து அம்மாநில அரசியலில் பேசுபொருளாகி உள்ளது.

பிரஹலாத் ஜோதி கருத்து
கர்நாடக தேர்தலை முன்னிட்டு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமியின் பஞ்சரத்னா யாத்திரை நடத்துவது குறித்து பேசிய மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மற்றும் நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அதற்கு போட்டியாக நவகிரக யாத்திரை மேற்கொள்ளப்படும் என்றார். இது தொடர்பாக குமாரசாமியிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

குமாரசாமி பதில்
இதற்கு பதிலளித்த அவர், "தலைநகர் டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். ஒரு கூட்டம் கூட்டியது. அதில் கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக பிராமணரை நியமனம் செய்ய திட்டமிட்டப்பட்டது. அவருடன் துணை முதலமைச்சராக 8 பேரை நியமிக்கவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முடிவு செய்து உள்ளது. யாரை எல்லாம் துணை முதலமைச்சராக்க முடிவு செய்துள்ளார்கள் என்ற பட்டியலும் எனக்கு உள்ளது.

2 வகை பிராமணர்
ஆர்.எஸ்.எஸ். சூழ்ச்சிக்கு வாக்காளர்கள் பலியாகிவிடக் கூடாது. பழங்காலத்திலிருந்து 2 வகையான பிராமணர்கள் உள்ளார்கள். ஒரு வகையினர் சமுதாயத்தை பிளவுபடுத்துபவர்கள். அவர்கள் புகழ்பெற்ற சிரிங்கேரி ஷரதா பீடத்தையும் அழித்துவிட்டார்கள். மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியும் அந்த வகையை சேர்ந்தவர்தான்.

மகாத்மா காந்தி கொலை
அவர்கள் மகாத்மா காந்தியை கூட கொலை செய்வதற்கு தயங்கவில்லை. இப்படி சமுதாயத்தை பிளவுபடுத்தும் பிராமணர்களுக்கு மகாராஷ்டிராவில் உள்ள பேஷ்வாக்களுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைக்கும் 2 ஆம் வகை பிராமணர்களும் உள்ளார்கள். பிரஹலாத் ஜோஷியும் அந்த வகை பிராமணர்கள்தான்." என்று தெரிவித்து இருக்கிறார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications