நன்னடத்தை விதிகள் பொருந்தும்.. சசிகலா வெளியே வருவார்.. அடித்து சொல்லும் ராஜாசெந்தூர் பாண்டியன்!
சொத்து குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா கண்டிப்பாக வெளியே வருவார் என்று அவரின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா கண்டிப்பாக விரைவில் வெளியே வருவார் என்று அவரின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்போது அவர் சிறை சென்று இரண்டு வருடம் 10 மாதம் ஆகிவிட்டது.
இன்னும் ஒன்றரை வருடம் அவர் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் தண்டனையை முழுதாக அனுபவிக்கும் முன் அவர் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

என்ன விதி
சிறை விதிகளின்படி ஒரு கைதி, தனது தண்டனை காலத்தில் பாதியை கழித்துவிட்டால், அவர்களுக்கு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை கிடைக்கும். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி கர்நாடக சிறைகளில் இருந்து இப்படி பல கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

என்ன பெயர்
இதில் சசிகலாவின் பெயர் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக வெளியான பட்டியலில் சசிகலாவின் பெயர் இடம்பெறவில்லை. சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது என்று கர்நாடக சிறைத்துறை தெரிவித்துவிட்டது.

பேட்டி அளித்தார்
இந்த நிலையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா கண்டிப்பாக விரைவில் வெளியே வருவார் என்று அவரின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி கர்நாடக சிறைகளில் இருந்து பல கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்.

விடுதலை ஆனார்
பாதி தண்டனை காலத்தை கழித்தவர்கள் எல்லோரும் விடுதலை செய்யப்படுவார்கள். ஆனால் ஊழல் வழக்கில் சிறை சென்று இருக்கும் சசிகலாவிற்கு இது பொருந்தாது என்று கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. கூறியுள்ளார். இதை ஏற்க முடியாது.

ஊழல் குற்றம்
ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருப்பவர்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. இதில் நன்னடத்தையை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். ஊழல் வழக்கை கவனத்தில் கொள்ள கூடாது. இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பியிடம் ஆலோசனை நடத்துவோம்.

வாய்ப்பு உள்ளது
சட்ட ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம். விரைவில் சசிகலா வெளியே வருவார். அதற்கான ஆலோசனை செய்து வருகிறோம். சசிகலா வெளியே வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது, என்று வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications