பறவையில் பறந்த “சாவர்க்கர்” - ரசிக்கும் அறிவு இல்லையா? கவித்துவமா பார்க்கனுமாம்.. அடடே விளக்கம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்காக அரசு வெளியிட்டுள்ள பாடபுத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சாவர்க்கர் அந்தமான் சிறையிலிருந்து புல் புல் என்ற பறவை மீது அமர்ந்து தப்பி சென்றார் என்று குறிப்பிடப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அதை கவித்துவமாக பார்க்க வேண்டும் என புத்தக வடிவமைப்பு குழு தெரிவித்துள்ளது.

கர்நாடக கல்வி நிலையங்களில் மதம் சார்ந்த அடையாளங்கள் இருக்கக்கூடாது என்று இஸ்லாமிய மாணவிகள் அணிந்து வரக்கூடிய ஹிஜாபுக்கு அம்மாநில அரசு தடை விதித்தது.

இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சமூக அறிவியல் மற்றும் மொழி பாடபுத்தகங்களில் உள்ள பாடங்களை திருத்தம் செய்ய ரோகித் சக்ரதிர்தா என்பவர் தலைமையில் கர்நாடக அரசு குழு அமைத்தது.

ஆர்.எஸ்.எஸ். பாடங்கள்

ஆர்.எஸ்.எஸ். பாடங்கள்

அதற்கு மாற்றாக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களையும், மதவெறியையும் போதிக்கூடிய பாடங்கள் புதிய புத்தகங்களில் சேர்க்கப்பட்டு இருப்பதாக சர்ச்சை கிளம்பியது. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கேஷவ் பலிராம் ஹேட்கேவர், சாவர்க்கர் குறித்த பாடங்கள் கர்நாடக அரசு வெளியிட்டு இருக்கும் பள்ளி பாட புத்தகங்களில் இடம் இருப்பதாக புகார்கள் குவிந்தன.

குழு கலைப்பு

குழு கலைப்பு

இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வெளியிட்டு உள்ள அறிக்கையில், பாடநூல்களை வடிவமைத்த குழுவை கலைப்பதாக அறிவித்தார். பாடநூல் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டதால் இந்த முடிவை எடுப்பதாக கூறினார். புத்தகங்கள் ஏதேனும் திருத்தம் தேவைப்பட்டால் அதை அரசாங்கமே மேற்கொள்ளும் என உறுதியளித்தார்.

சாவர்க்கர் சர்ச்சை

சாவர்க்கர் சர்ச்சை

இந்த நிலையில் கர்நாடக மாநில பாடத்திட்டத்தில் உள்ள 8 ஆம் வகுப்பு கன்னட மொழி பாடப்புத்தகத்தில் ''அந்தமான் சிறைச்சாலையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டு இருந்த சிறிய அறையில் சிறிய துளை கூட கிடையாது. ஆனால், அவரது அறைக்கு எப்படியோ ஒரு புல் புல் பறவை வந்து விடும். அந்த பறவையின் சிறகின் மீது ஏறி அமரும் சாவர்க்கர் தினமும் தாய் மண்ணிற்கு வந்து செல்வார்.'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

புத்தக குழு விளக்கம்

புத்தக குழு விளக்கம்

இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் புத்தக வடிவைப்புக் குழுவின் தலைவர் ரோகித் சக்ரதீர்த்தா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அதில், "அந்த வரிகள் அழகிய புலமை நயமானவை. இதனை புரிந்து ரசிக்கக்கூடிய அளவுக்கு அறிவு இல்லை என்பது அதிசயமாக உள்ளது. அதை நேரடியாக புரிந்துகொள்ளாமல் கவித்துவமாக பார்க்க வேண்டும்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+