சினிமா தியேட்டரில் உயரத்தில் இருந்த போஸ்டரை மாற்றிய வாட்ச்மேன் தவறி விழுந்து பலி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் உள்ள திரிவேனி தியேட்டரில் உயரத்தில் இருந்த சினிமா பட போஸ்டரை மாற்றும் போது தவறி விழுந்த வாட்ச்மேன் பலியானார்.

பெங்களூரில் உள்ள திரிவேனி தியேட்டரில் ஒரு போஸ்டர் உயரத்தில் ஒட்டப்பட்டிருந்தது. அந்த போஸ்டரை நீக்கிவிட்டு வேறு ஒரு புதிய போஸ்டரை ஒட்ட வேண்டும் என தியேட்டர் நிர்வாகம் தனது ஊழியர்களிடம் தெரிவித்தது.

Security guard dies after falling from height at theatre in Bengaluru

இந்த பணியை அந்த தியேட்டரின் வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்த ஒருவர் செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இதுகுறித்து தியேட்டர் உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

Security guard dies after falling from height at theatre in Bengaluru

அதற்கு அவர் போஸ்டரை மாற்றும் பணி வாட்ச்மேனுக்கானது இல்லை. எனினும் அவர் ஏன் அந்த பணியை செய்தார் என தெரியவில்லை என உரிமையாளர் தெரிவித்தார். இதையடுத்து மற்ற ஊழியர்களிடமும் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+