ஆபாசம்.. அருவெறுப்பு.. கில் தங்கையை கூட விட்டுவைக்காத ரசிகர்கள்! என்ன கொடுமை இது? கோலிக்கு தெரியுமா?
பெங்களூர்: நேற்று பெங்களூர் அணியை வீழ்த்தி குஜராத் அணி வென்றது. பெங்களூர் அணியின் வெளியேற்றத்திற்கு காரணமாக அமைந்த சுப்மான் கில்லை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
அதிலும் அவரின் தங்கையையும் சேர்த்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈ சாலா கப் நமதே என்று நம்பிக்கையாக களமிறங்கிய பெங்களூர் அணி இந்த சீசனிலும் ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்து..கோப்பையை வெல்லாமல்.. இதயங்களை மட்டும் வென்று தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.

நேற்று குஜராத் - பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. உறுதியாக வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இறங்கிய பெங்களூர் அணியில் பேட்டிங்கில் கோலி மட்டும் தனி ஆளாக நின்று போராடினார்.
20 ஓவரில் கோலி அதிரடியால் பெங்களூர் அணி 197 ரன்கள் எடுத்தது. கோலி மட்டும் 101 ரன்கள் எடுத்தார். இதனால் எப்படியும் பெங்களூர் வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று குஜராத் இளம் வீரர் கில் அடித்த 104 ரன்கள் மற்றும் விஜய் சங்கர் அடித்த அரை சதம் காரணமாக குஜராத் அணி எளிதாக வென்றது.
முக்கியமாக பெங்களூர் அணியை கில் புரட்டி எடுத்தார். பாதி போட்டிக்கு இடையே கோலி அப்படியே முகத்தை தொங்கப்போட்டு உட்காரும் நிலை ஏற்பட்டது. பெங்களூர் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக குஜராத் வீரர் கில் பார்க்கப்பட்டார்.
அவரின் சதம்தான் குஜராத் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. பெங்களூர் அணியின் வெளியேற்றத்திற்கு காரணமாக அமைந்த சுப்மான் கில்லை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
அதிலும் அவரின் தங்கையையும் சேர்த்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்வது பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்ன செய்தனர்? கில் போஸ்ட் செய்த இன்ஸ்ட்டாகிராம் போஸ்ட் அனைத்திலும் பெங்களூரின் அணியின் ரசிகர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அதேபோல் அவரின் தங்கை ஷா நீல் கில் போஸ்டில் கூட இதேபோல் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து போஸ்ட் போட்டு வருகின்றனர்.
அதிலும் சிலர் அந்த பெண்ணை உடல் ரீதியாக, கொச்சையாக, ஆபாசமாக விமர்சனம் செய்துள்ளனர். பெங்களூர் வெளியேறியதற்கு கில்தான் காரணம் என்று கூறி இந்த விமர்சனங்களை அவர்கள் வைத்து வருகின்றனர்.

நெட்டிசன்கள் இந்த செயல் இணையத்தில் கடும் விமர்சனங்களை பெற்றுள்ளது. கோலி இதில் தலையிட்டு ரசிகர்களை அடக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
பேட்டி: நேற்று இந்த போட்டியில் செஞ்சுரி அடித்தது தொடர்பாக கில் அளித்த பேட்டியில், நான் நல்ல ஃபார்மில் இருக்கிறேன்,. முதலில் நல்ல தொடக்கத்தை கொடுத்துவிட்டு பின்னர் கடைசி கட்டத்தில் அடித்து ஆடி அதிக ரன்களை எடுக்க வேண்டும். ஐபிஎல்லின் முதல் பாதியில், அந்த வித்தை எனக்கு வரவில்லை. இதனால் பெரியரன்களை அடிக்க முடியாமல் நான் தவறவிட்டேன். நான் நிறைய 40 மற்றும் 50 ரன்களை அடித்து இருக்கிறேன்.
ஆனால் சதம் அடிக்க முடியாமல் போனது. தற்போது அப்படி இல்லை. தற்போது அந்த வித்தையையை கற்றுக்கொண்டேன். டி20 கிரிக்கெட்டில் நான் தொடர்ந்து நிறைய புதிய ஷாட்களை ஆட வேண்டும் என்று இருக்கிறேன் என்று கில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications