சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவிற்கு காங்கிரஸ் புதிய பொறுப்பு வழங்கி உள்ளது. அதன்படி சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்று கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். சித்தராமையா 3 ஆண்டுகளாக முதல்வர் பதவியை நிறைவு செய்த நிலையில் அவர் கடந்த மாதம் 28 ம் தேதி ராஜினாமா செய்தார்.

இதையடுத்து புதிய முதல்வராக டிகே சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிகே சிவக்குமார் தொடர்ந்து கட்சி மேலிடத்திடம் முதல்வர் பதவி வேண்டும் என்று கூறி வந்த நிலையில் தற்போது சித்தராமையாவிடம் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கர்நாடகாவின் புதிய முதல்வராக டிகே சிவக்குமார் நாளை பொறுப்பேற்க உள்ளார். நாளை மாலை 4.05 மணிக்கு பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் டிகே சிவக்குமார் முதல்வராக பதவியேற்கிறார். அவருடன் 10 முதல் 12 பேர் வரை அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்புள்ளது.
இதற்கிடையே தான் அமைச்சரவையில் புதிதாக யாரை சேர்ப்பது? என்பது தொடர்பாக சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோரிடம் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் இன்று விவாதித்தனர். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அமைச்சர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே தான் கர்நாடகா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவிற்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினராக சித்தராமையா சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Hon'ble Congress President Shri @kharge has appointed Shri @siddaramaiah as Member of the Congress Working Committee, with immediate effect. pic.twitter.com/QHH7fYHqnJ
— Congress (@INCIndia) June 2, 2026
அதில், ''காங்கிரஸ் கட்சியின் தலைவர் (மல்லிகார்ஜுன கார்கே), சித்தராமையாவை காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்துள்ளது. இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது'' என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் செயற்குழு என்பது மிகவும் முக்கியமானதாகும்.
இந்த செயற்குழுவில் தான் கட்சி சார்ந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். சித்தராமையாவிற்கு தற்போது 77 வயது ஆகிறது. நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். இதனால் அவரது அனுபவத்தை பயன்படுத்தி கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சி அவரை செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications