பாதிக்கு பாதி கடன்.. சித்தராமையாவின் சொத்து மதிப்பு இவ்வளவு தானா? மனைவியை விட ரொம்ப குறைவு! விபரம்
பெங்களூர்: கர்நாடகாவில் 2013 முதல் 2018 வரை முதல்வராக இருந்த சித்தராமையா நேற்று வருணா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி சித்தராமையா பாதிக்கு பாதி கடனாளியாக இருப்பதும், அவரது சொத்து மதிப்பு மனைவியை விட ரொம்ப குறைவாக உள்ளதும் தெரியவந்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான(காங்கிரஸ்) சித்தராமையா மீண்டும் தனது சொந்த தொகுதியான மைசூர் மாவட்டம் வருணாவில் போட்டியிடுகிறார். கடந்த முறை இந்த தொகுதியில் அவரது மகன் யதீந்திரா போட்டியிட்டு பெற்றார்.

மகனின் அரசியலுக்காக சித்தராமையாக கடந்த முறை தொகுதி மாறினார். மைசூர் மாவட்டம் சாமுண்டேஸ்வரி மற்றும் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் போட்டியிட்டார். இதில் பாதாமியில் மட்டும் வெற்றி பெற்றார். இந்த முறை சித்தராமையா கோலார் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.
ஆனால் கட்சி மேலிடம் அவருக்கு வருணா தொகுதியை ஒதுக்கியது. காங்கிரஸ் கட்சிக்கு சித்தராமையா அதிக பிரசாரம் செய்ய வேண்டும்என்பதாலும், அடுத்த முதல்வர் வாய்ப்பு உள்ளவர் என்பதாலும் எளிதாக வெற்றி பெறும் வகையில் வருணா தொகுதியை சித்தராமையாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் தற்போதைய தேர்தலில் சித்தராமையாவின் மகன் யதீந்திரா போட்டியிடவில்லை.
இந்நிலையில் தான் சித்தராமையா நேற்று வருணா தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார். கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் என பெரும்படையுடன் சித்தராமையா மனுத்தாக்கல் செய்தார். இந்த வேட்புமனுவில் சித்தராமையா தனது சொத்து விபரம் உள்பட குடும்பத்தினரின் சொத்து விபரங்களை தெரிவித்துள்ளார். அதன்படி சித்தராமையாவின் குடும்ப சொத்து மதிப்பு ரூ.51 கோடியாக உள்ளது.

இதில் சித்தராமையாவுக்கு மொத்தம் ரூ.19 கோடி சொத்து உள்ளது. இதில் 9.58 கோடி அசையும் சொத்தாகவும், 9.34 கோடி அசையா சொத்தாகவும் இருக்கிறது. கடந்த 2018 தேர்தலில் சித்தராமையாவின் சொத்து மதிப்பு ரூ.18.55 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.55 லட்சம் வரை அதிகரித்துள்ளது. மேலும் சித்தராமையாவுக்கு 6.84 கோடி கடன் இருப்பதும் தெரியவந்துள்ளது.
அதேநேரத்தில் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு ரூ.32.12 கோடி சொத்து இருக்கிறது. இதில் ரூ.19.56 கோடி அசையா சொத்தாகவும், ரூ.11.26 கோடி அசையும் சொத்தாகவும் உள்ளது. இருப்பினும் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 16.24 கோடி வரை கடன் இருப்பது தெரியவந்தது. இதன்மூலம் சித்தராமையாவின் சொத்து மதிப்பு என்பது அவரது மனைவி பார்வதியின் சொத்து மதிப்பை விட குறைவாக இருப்பதும், இதன்மூலம் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.23 கோடி வரை கடன் இருப்பதும் தெரியவந்துள்ளது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications