சித்தராமையா VS டிகே சிவக்குமார்.. கர்நாடகா முதல்வர் யார்? களமிறங்கும் ராகுல்.. டிச.1க்குள் முடிவு
பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் பதவியை கைப்பற்ற துணை முதல்வர் டிகே சிவக்குமார் முயற்சிக்கிறார். அதேவேளையில் மறுபுறம் சித்தராமையா முதல்வர் பதவியை தக்க வைக்க முயற்சித்து வருகிறார். இதனால் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் அமைதி காத்து வரும் நிலையில் கர்நாடகா அரசியல் களம் மட்டும் உஷ்ணமாகி வருகிறது. இந்நிலையில் தான் கர்நாடகாவில் முதல்வராக சித்தராமையாவை தொடர வைப்பதா? இல்லாவிட்டால் டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி வழங்குவதா? என்பது பற்றி டிசம்பர் 1ம் தேதிக்குள் காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க உள்ளதாகவும், இதுதொடர்பாக ராகுல் காந்தி - மல்லிகார்ஜூன கார்கே இன்று அல்லது நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் கடந்த 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்றது. அன்று முதல் சித்தராமையாக முதல்வராக செயல்பட்டு வருகிறார். அதேவேளையில் காங்கிரஸ் தலைவராக இருக்கும் டிகே சிவக்குமார், துணை முதல்வராக இருக்கிறார்.

சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல்வர் பதவியை பிடிப்பதில் சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. அதில் சித்தராமையா வென்று அரியணை ஏறினார். தற்போது சித்தராமையா இரண்டரை ஆண்டு முதல்வர் பதவியை நிறைவு செய்துள்ளார்.
இந்நிலையில் தான், டிகே சிவக்குமார் முதல்வர் பதவி மீது கண்வைத்துள்ளார். அடுத்த இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை அனுபவிக்க அவர் தயாராகி வருகிறார். முதற்கட்டமாக அவரது ஆதரவாளர்கள் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து டிகே சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் கடந்த 2023ல் கூறியபடி முதல் இரண்டரை ஆண்டு சித்தராமையா முதல்வராகிவிட்டார். இதனால் அடுத்த இரண்டரை ஆண்டுகள் டிகே சிவக்குமாரை முதல்வர் பதவியில் அமர வைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இது கர்நாடகா அரசியலில் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் இப்படியான களேபரம் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தாலும் காங்கிரஸ் மேலிடம் அமைதி காத்து வருகிறது. இதுபற்றி வெளிப்படையாக மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, கேசி வேணுகோபால் உள்ளிட்டவர்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே தான் டிகே சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று கூறி உள்ளனர்.
மேலும் 2 நாட்களுக்கு முன்பு பெங்களூரில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை, முதல்வர் சித்தராமையா சந்தித்தார். அப்போது முதல்வர் பதவி விவகாரத்தில் மேலிடம் தனது முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது கர்நாடகா முதல்வர் பதவி விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் டிசம்பர் 1ம் தேதிக்குள் முடிவை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. கர்நாடகா முதல்வராக சித்தராமையா தொடர வேண்டுமா? இல்லாவிட்டால் புதிய முதல்வராக டிகே சிவக்குமாரை நியமிக்க வேண்டுமா? என்பது பற்றி மேலிடம் தற்போது தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக விரைவில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தியுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை இன்று அல்லது நாளை நடக்கும். அதன்பிறகு காங்கிரஸ் மேலிடம் கர்நாடகா முதல்வர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சூனியம்? பெங்களூர் வீட்டருகே தலையின்றி கிடந்த சேவல் + எலுமிச்சையால் ஷாக் -
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications