டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கடந்த 2023 தொடங்கி, 3 ஆண்டுகளாக கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்த சித்தராமையா, டி.கே.சிவகுமாரின் நெருக்கடி காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அடுத்த முதல்வராக சிவகுமார் தேர்வாக உள்ள நிலையில், ராகுல் காந்தியிடம் முக்கிய கோரிக்கையை சித்தராமையா வைத்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

கடந்த 2023 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், யாரை முதலமைச்சராக்குவது என்பதில் பெரிய இழுபறி நீடித்தது. ஒரு பக்கம் சீனியர் சித்தராமையாவும், இன்னொரு பக்கம் வெற்றிக்கு கடுமையாக உழைத்த டி.கே.சிவகுமாரும் தங்களைதான் முதல்வராக்க வேண்டும் என்று ஒற்றை காலில் நின்றனர். இதனையடுத்து ஆளுக்கு பாதி காலம் முதலமைச்சராக இருங்கள் என்று காங்கிரஸ் தலைமை சமாதானம் சொன்னது.

Siddaramaiah

அப்போதைக்கு பிரச்சனை ஓய்ந்திருந்தாலும், இப்போது டி.கே.சிவகுமார் டீம் முதலமைச்சர் பதவியை கேட்டு நெருக்கடி கொடுக்க, வேறு வழியின்றி சித்தராமையா ராஜினாமா செய்திருக்கிறார். அவருக்கு மாநிலங்களவை எம்பி பதவியை கொடுக்க காங்கிரஸ் தலைமை முன் வந்தது. இருப்பினும் அதை பெற்றுக்கொள்ளாத சித்தராமையா, தேசிய அரசியலில் ஈடுபாடு இல்லை என்று ஒதுங்கிக்கொண்டார்.

இப்படி இருக்கையில் அடுத்த முதல்வராக தேர்வாக உள்ள டி.கே.சிவகுமாருக்கு செக் வைக்கும் விதமாக, முக்கியமான கோரிக்கையை காங்கிரஸ் தலைமைக்கு சித்தராமையா வைத்திருக்கிறார்.

கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய சித்தராமையா, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அரசுக்கும் கட்சிக்கும் இடையே பாலமாகச் செயல்பட ஒரு ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், அதற்குத் தன்னைத் தலைவராக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் மேலிடத்திடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதன் மூலம் மாநிலத்தில் டி.கே. சிவகுமாருக்கு இணையாக மற்றொரு மாற்று அதிகார மையமாகத் தொடர்ந்து நீடிக்க சித்தராமையா திட்டமிட்டுள்ளார். சித்தராமையாவின் இந்த அதிரடித் திட்டத்திற்கு காங்கிரஸ் மேலிடம் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த விவகாரத்தை டி.கே.சிவகுமார் டீம் சீரியஸாக அனுகுயிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+