கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பொய்களின் நிபுணர்... சொல்வது யாருனு பாருங்க!
பெங்களூரு: காங்கிரசுடன் கூட்டணி வைத்து மதசார்ப்பற்ற ஜனதா தளம் தனது நற்பெயரை இழந்து விட்டதாக கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி குற்றம் சாட்டினார். இதற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா, குமாரசாமி எப்போதும் பொய் சொல்ல கூடியவர் என தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர்களான இவர்களின் வார்த்தை போரால் அக்கட்சிகளின் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே வேளையில் ஆளும் கட்சியான பாஜக உற்சாகம் அடைந்துள்ளது.

கர்நாடகாவில் சட்டபேரவை தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ், மதசார்ப்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி இருந்தது. எச்.டி. குமாரசாமி முதல்வராக இருந்தார். அதன்பிறகு அந்த ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து காங்கிரசும், மதசார்ப்பற்ற ஜனதா தளமும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருவது வாடிக்கையாகி விட்டது. இந்த நிலையில் மைசூரில் செய்தியாளர்களை சந்தித்த எச்.டி. குமாரசாமி காங்கிரசை கடுமையாக தாக்கினார்.
அவர் பேசுகையில், 'பா.ஜ.க.வுக்கு அதிகாரத்தை மாற்றவில்லை என்பதற்காக எனக்கு எதிராக பெரிய பிரச்சாரம் நடந்த போதிலும் மக்களிடம் பெற்ற நற்பெயரை 12 ஆண்டுகளாக காப்பாற்றி வந்தேன். ஆனால் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் எங்களுடைய நற்பெயர் கெட்டு விட்டது. அனைத்தும் அழிந்து விட்டது. நாங்கள் பா.ஜ.க.வின் பி டீம் என்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. அதுதான் எனது அரசு வீழ்ச்சி அடைந்ததற்கு காரணம். நான் காங்கிரசுடன் கூட்டணி வைத்து இருக்கக் கூடாது என்றார்.
குமாரசாமியின் குற்றச்சாட்டுக்கு சித்தராமையா உடனடி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-குமாரசாமி பொய் சொல்வதில் நிபுணர். இதுபோல் பொய் கண்ணீர் வடிப்பது அவரது குடும்பத்தினருக்கு கைவந்த கலை. அவருக்கு ஒருபோதும் காங்கிரஸ் மீது நல்லெண்ணம் இல்லை. குமாரசாமி தனது அரசியல் நலன்களுக்காக தொடர்ந்து பொய் சொல்கிறார். தேர்தலில் நாங்கள் 80 இடங்களில் வெற்றி பெற்றோம்.
ஆனால் அவர்கள் 37 இடங்களே பிடித்தனர். ஆனாலும் நாங்கள் அவரை(குமாரசாமி ) ஒரு வருடம், மூன்று மாதங்கள் முதல்வராக்கி அழகு பார்த்தோம். இதில் யாருக்கு நன்மை கிடைத்தது என்பதை குமாரசாமி சொல்ல வேண்டும். அவர் வெஸ்ட் எண்ட் ஹோட்டலில் இருந்து அரசை நடத்தி வந்தவர். இவ்வாறு சித்தராமையா கூறினார்.
-
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications