பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெட்கமாக இருக்கிறது எடியூரப்பா.. 144 தடை குறித்து விமர்சித்த சித்தராமையா!

Google Oneindia Tamil News

Recommended Video

    பெங்களூருவில் வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா கைதுக்கு கமல்ஹாசன் கண்டனம்

    பெங்களூர்: பெங்களூரில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு வெட்கமாக இருக்கிறது என எடியூரப்பாவை முன்னாள் முதல்வர் சித்தராமையா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    வடகிழக்கு மாநிலங்கள், வட மாநிலங்கள், தென்னிந்தியா என நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களில் போராட்டக்காரர்கள் பேருந்துகளா எரிப்பது, கல்வீசுவது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Siddaramaiah slams Yeddyurappa for 144 imposition in Karnataka

    பெங்களூரில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.இந்த நிலையில் பெங்களூர் நகரம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் 144 தடையுத்தரவு அமலுக்கு வருவதாக மாநகர போலீஸார் அறிவித்தனர். போராட்டங்களை ஒடுக்குவதற்காக மாநில பாஜக அரசு போலீஸா ஏவி விடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    இந்த 144 தடையுத்தரவை மீறி டவுன்ஹால் பகுதியில் எழுத்தாளர் ராமசந்திர குஹா தர்ணா போராட்டம் நடத்தினார். அவரை போலீஸார் இழுத்து சென்று அப்புறப்படுத்தினர்.

    இந்த நிலையில் 144 தடையுத்தரவு குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா, கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் அரசியலமைப்பின் மீதான தொடர் தாக்குதலுக்கு பிறகு, 144 தடையுத்தரவு மூலம் அமைதியாக போராடும் உரிமையை கூட பறித்துவிட்டீர்கள்.

    எடியூரப்பா! நரேந்திர மோடியை போல் செயல்படுவீர்கள் என நான் எதிர்பார்க்கவேயில்லை. அவர் முற்போக்கானவர் என நினைத்தேன். இப்போது வெட்கமாக இருக்கிறது எடியூரப்பா என தனது ட்விட்டர் பக்கத்தில் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    English summary
    Siddaramaiah slams Yeddyurappa as "Shame on You" over 144 imposition in Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X