சித்தராமையா முதல்வராவதை விடுங்க.. கர்நாடகாவில் அதிக நாட்கள் முதல்வராக இருந்தது யார் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக முதல்வராக சித்தராமையா நாளை பதவியேற்கும் நிலையில், இதுவரை கர்நாடகாவில் எந்தெந்த முதல்வர்கள் எத்தனை காலம் முதல்வராக இருந்துள்ளனர் என்பதைப் பார்க்கலாம்.

கடந்த வாரம் கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. சில எக்ஸிட் போல்களில் தொங்கு சட்டசபை அமையும் எனக் கூறப்பட்ட நிலையில், அதைத் தாண்டி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது.

Siddaramaiah to be Karnataka Chief Ministers but which leaders served the longest?

கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் இருக்கும் நிலையில், 113 தொகுதிகளில் வென்றால் பெரும்பான்மை கிடைக்கும் என்ற சூழல் உருவானது. காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் 42% வாக்கு சதவிகிதத்துடன் 135 இடங்களைக் கைப்பற்றியது.

கர்நாடகா: அதைத் தொடர்ந்து அங்கே முதல்வர் யார் என்பதில் சித்தராமையா மற்றும் சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. முதல்வர் யார் என்பதைத் தேர்வு செய்ய 4 நாட்கள் இழுபறி நிலவியது. இந்தச் சூழலில் தான் கர்நாடக முதல்வராக சித்தராமையா அறிவிக்கப்பட்டார். அதேபோல டிகே சிவக்குமார் துணை முதல்வராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 முதல் 2018 வரை கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா மீண்டும் முதல்வர் பதவிக்கு வந்துள்ளார். நாளை கர்நாடக முதல்வர் பதவியேற்கும் நிலையில், இதுவரை கர்நாடகாவில் எந்தெந்த முதல்வர்கள் எத்தனை காலம் முதல்வராக இருந்துள்ளனர்.. நீண்ட காலம் முதல்வர் பதவியில் இருந்தவர் யார் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

நீண்ட காலம்: கர்நாடகாவின் ஒன்பதாவது முதல்வரான காங்கிரஸின் டி தேவராஜ் அர்ஸ் தான் மிக நீண்ட காலம் முதல்வர் பதவியில் இருந்தவர். இரு முறை முதல்வராக இருந்த அவர், மொத்தம் 2,790 நாட்கள் கர்நாடக முதல்வராக இருந்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் எஸ் நிஜலிங்கப்பா இரண்டு முறை முதல்வராக 2,729 நாட்கள் பதவியில் இருந்தார். அவர் கர்நாடகாவின் நான்காவது மற்றும் ஏழாவது முதலமைச்சராக இருந்தார். நிஜலிங்கப்பா 1956இல் முதலில் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாக முதல்வர் பதவியில் இருந்தார். அவர் மீண்டும் 1962இல் மீண்டும் முதல்வரான நிலையில், ஆறு ஆண்டுகள் பணியில் இருந்தார்.

ராமகிருஷ்ண ஹெக்டே இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அவர் பல முறைகளில் மொத்தம் 1,967 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார்.

சித்தராமையா: இப்போது முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள சித்தராமையா, 2013-18 வரை 5 ஆண்டுகள் முழுமையாக முதல்வர் பொறுப்பில் இருந்தார். கடந்த 40 ஆண்டுகளில் ஐந்தாண்டுகள் முழுமையாகப் பதவி வகித்த முதல் கர்நாடக முதல்வர் இவர்தான். சொல்லப்போனால் தேவராஜ் அர்ஸுக்குப் பிறகு கர்நாடகாவில் முழுமையாக 5 ஆண்டுகள் இருந்த இரண்டாவது நபர் சித்தராமையா தான்.

2013 மே மாதம், சித்தராமையா கர்நாடகாவின் 28வது முதல்வராகப் பதவியேற்றார். மே 15, 2018 வரை அவர் முதல்வர் பதவியில் தொடர்ந்தார். முன்னதாக அவர் ஜனதா தளம் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியில் இரு முறை துணை முதல்வராகவும் இருந்துள்ளார்.

அதேபோல கர்நாடகாவில் 9 பேர் ஓராண்டிற்குக் குறைவாக முதல்வர் பதவியில் இருந்துள்ளனர். கடைதல் மஞ்சப்பா மிகக் குறைந்த நாட்கள், அதாவது 73 நாட்கள் மட்டுமே முதலமைச்சராக பணியாற்றினார். மேலும், கர்நாடக முதல்வர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே பதவி வகித்தவர்கள்.

முதல்வர்கள்: மேலும், கர்நாடகாவில் 6 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்துள்ளது. வீரேந்திர பாட்டீல் ராஜினாமா செய்த பிறகு 1971 மார்ச் 19ஆம் தேதி முதல் முறையாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கே அமலுக்கு வந்தது. அப்போது சுமார் ஒரு வருடம் குடியரசுத் தலைவர் ஆட்சி நீடித்தது. அதேபோல 2007 நவம்பர் மாதம் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்த போது 6 மாதங்கள் நீடித்தது.

அதேபோல சமூக வாரியாக பார்த்தால் 1947 முதல் மாநிலத்தில் உள்ள முதல்வர்கள் பட்டியலில், ஒன்பது பேர் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஏழு பேர் வொக்கலிகர் மூகத்தைச் சேர்ந்தவர்கள்.

நாளை மே 20-ம் தேதி பெங்களூருவில் கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெகபூபா முப்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+