Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரியா போச்சு.. சித்தராமையா, டிகே சிவக்குமார் ஒருபக்கம்னா கர்நாடக முதல்வர் பதவிக்கு 3வதாக ஒரு போட்டி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் பதவி தொடர்பாக தற்போதைய முதல்வர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார் இடையே போட்டி உள்ளது. இதில் 3வது நபராக முதல்வர் பதவியை பெறுவதில் காங்கிரஸ் தேசிய தவைர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவுக்கும் விரும்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் தோல்வியடைந்ததால் பாஜக ஆட்சியை இழந்தது. மாறாக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

Siddaramaiah VS DK Shivakumar: Kharge son Priyank Kharge says he would accept CM post if requested

இதையடுத்து முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக முதல்வர் பதவி சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் பதவி டிகே சிவக்குமாருக்கும் வழங்கப்பட்டது.

இருப்பினும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் 5 ஆண்டு நடக்கும்போது முதல் இரண்டரை ஆண்டு சித்தராமையாவும், கடைசி இரண்டரை ஆண்டு டிகே சிவக்குமாருக்கும் முதல்வர் பதவி வழங்கப்படுவதாக தகவல்கள் பரவின. இதுபற்றி கட்சி மேலிட தலைவர்கள் யாரும் இதுவரை வெளிப்படையாக கூறவில்லை. ஆனாலும் மேலிட தலைவர்கள் இப்படி இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவியை பகிர்ந்து வழங்குவதாக கூறி தான் டிகே சிவக்குமாரை சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் இப்போது திடீரென்று கிளம்பி விவாதத்தை கிளப்பி உள்ளது. இதற்கிடையே தான் நேற்று முதல்வர் சித்தராமையாவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதாவது, ‛‛இரண்டை ஆண்டுக்கு பிறகு முதல்வர் மாற்றம் செய்யப்பட உள்ளாரா?'' என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சித்தராமையா மறுப்பு தெரிவித்து விளக்கமும் அளித்தார்.

இதுதொடர்பாக சித்தராமையா, ‛‛கர்நாடகாவில் 5 ஆண்டு காங்கிரஸ் ஆட்சி நடக்கும். இதில் நான் தான் முதல்வர். நான் முதல்வராக தொடருவேன்'' என்றார். சித்தராமையாவின் இந்த பதில் என்பது டிகே சிவக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. டிகே சிவக்குமாருக்கு கடைசி இரண்டரை ஆண்டுகளில் முதல்வர் பதவி கிடைக்கும் என அவர்கள் நம்பி வரும் நிலையில் சித்தராமையாவின் இந்த பதில் என்பது அவர்களை ஷாக்காக்கி உள்ளது.

இப்படி சித்தராமையா-டிகே சிவக்குமார் இடையே முதல்வர் பதவி தொடர்பான போட்டி நடந்து வரும் நிலையில் தான் அதில் தற்போது புதிதாக மல்லிகார்ஜூன கார்கேவின் மகனும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான பிரியங்க் கார்கே இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அவரும் கர்நாடகா முதல்வர் பதவி மீது கண்வைத்துள்ளது அவர் அளித்த பதிலால் தெரியவந்துள்ளது.

அதாவது பிரிங்க் கார்கேவிடம், ‛‛கர்நாடகா முதல்வரவீர்களா?'' என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‛‛இதனை காங்கிரஸ் மேலிடம் தான் சொல்ல வேண்டும். அவர்கள் ஓகே சொன்னால் நான் கர்நாடகா முதல்வர் பதவிக்கு தயாராக இருக்கிறேன்'' என்றார். இதன்மூலம் பிரியங்க் கார்கேவும் முதல்வர் பதவி மீது கண்வைத்துள்ளது உறுதியாகி உள்ளது.

பிரியங்க் கார்கே தற்போது 3வது முறையாக எம்ஏல்ஏவாக உள்ளார். பிரியங்க் கார்கே காங்கிரஸ் கட்சியில் மாணவர் அணியில் இருந்தே செயல்பட தொடங்கினார். கர்நாடகாவில் என்எஸ்யூஐ மாநில பொதச்செயலாளராக 2001 முதல் 2005 வரை செயல்பட்டார். அதன்பிறகு இளைஞர் காங்கிரஸின் மாநில செயலாளராகவும், அதன்பிறகு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச்செயலாளராகவும் செயல்பட்டார்.

Siddaramaiah VS DK Shivakumar: Kharge son Priyank Kharge says he would accept CM post if requested

அதன்பிறகு 2009 ம் ஆண்டு முதல் முறையாக கலபுரகி மாவட்டம் சித்தாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து இளைஞர் காங்கிரஸின் மாநில துணை தலைவரானார். அதன்பிறகு 2013, 2018, 2023 ஆகிய சட்டசபை தேர்தல்களில் சித்தாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தொடர்ந்து வருகிறார்.

இவர் கடந்த 2013ல் முதல் முறையாக எம்எல்ஏ ஆனபோது அப்போதைய சித்தராமையாவின் அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துறை அமைச்சராக செயல்பட்டார். அதன்பிறகு 2018 ல் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணியில் 2வது முறையாக அமைச்சரானார். அப்போது சமூக நலத்துறை அமைச்சராக செயல்பட்டார். இதைடுத்து 2023ல் 3வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+