கர்நாடகா முதல்வர் யார்? சித்தராமையா, டிகே சிவக்குமாரை சமாளிக்குமா காங்கிரஸ்? கையில் 5 பிளான்! ஆஹா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவியை பெறுவதில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் விடாப்பிடியாக உள்ளனர். முதல்வர் பதவியை விட்டுகொடுக்க இருவரும் விரும்பவில்லை. இதனால் தான் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமாரை சமாளிக்க காங்கிரஸ் கட்சி 5 மேஜர் பிளானை வைத்துள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஒரு மாதமாக கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரத்தால் பரபரப்பாக காணப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்து ரிசல்ட் வெளியாகி உள்ளது. இதில் பாஜக ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டியுடன் ஆட்சியை எட்டிப்பிடித்துள்ளது.

மொத்தம் 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135, பாஜக 66, ஜேடிஎஸ் 19, மற்றவர்கள் 4 தொகுதிகளில் வென்றன. இதன்மூலம் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து மீண்டும் கர்நாடகா அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

Siddaramaiah VS DK Shivakumar: Who will gets CM Post for Karnataka, Congress 5 major plans here

இதற்கு முக்கிய காரணம் முதல்வர் பதவி தான். காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவியை பெறுவதில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் தான் இருவரும் டெல்லியில் முகாமிட்டு கட்சி மேலிட தலைவர்களை இன்று சந்திக்கின்றனர். இதற்கிடையே கர்நாடகா முதல்வர் பதவியை இருவரில் யாருக்கு வழங்குவது என்பது குறித்து கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வராக தேர்வு செய்வதில் எம்எல்ஏக்கள் முக்கிய பங்கு வகிக்க உள்ளனர். சித்தராமையா அல்லது டிகே சிவக்குமார் ஆகியோரில் யாருக்கு எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதோ அவரையே கட்சி மேலிடம் முதல்வராக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் சித்தராமையாவுக்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது டிகே சிவக்குமாரை விட சித்தராமையாவுக்கு தான் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு அதிகம் உள்ளது. இந்நிலையில் தான் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி வழங்கினால் டிகே சிவக்குமார் அதிருப்தி அடையலாம். இதனால் தான் டிகே சிவக்குமாரை சமாதானப்படுத்த கட்சி மேலிடம் 5 மேஜர் பிளான்களை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் விபரம் வருமாறு:

முதல் பிளான்: சித்தராமையாவுக்கு அதிக எம்எல்ஏக்கள் இருக்கும் பட்சத்தில் அவரை முதல்வராக்கலாம். அதேநேரத்தில் டிகே சிவக்குமாரை கைவிடக்கூடாது. இதனால் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதோடு மாநில தலைவர் பதவியையும் தொடர அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலும் அமைச்சரவையில் அவரது ஆதரவாளர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2வது பிளான்: ஒருவேளை சித்தராமையாவை முதல்வராக்காக டிகே சிவக்குமார் ஒப்புக்கொள்ளாவிட்டால் மாற்று வழியாக இரண்டரை ஆண்டு திட்டத்தை கையில் எடுக்க வியூகம் வகுத்துள்ளது. இதன்மூலம் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமாருக்கு தலா இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி வழங்கவும் பிளானையும் காங்கிரஸ் மேலிடம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

3வது பிளான்: இந்த இரண்டரை ஆண்டு பதவி பங்கீட்டுக்கு டிகே சிவக்குமார் ஒப்புக்கொள்ளாவிட்டால் முதல் 2 ஆண்டுகள் சித்தராமையாவுக்கும், அடுத்த 3 ஆண்டுகள் டிகே சிவக்குமாருக்கும் முதல்வர் பதவி வழங்க காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கைமேல் பலன் கிடைக்கும் என நம்புகின்றனர்.

4வது பிளான்: ஒருவேளை இந்த 2:3 ஆண்டு திட்டத்துக்கு டிகே சிவக்குமார் ஒப்புக்கொள்ளாவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை சித்தராமையாவை முதல்வராக்கவும் அதன்பிறகு டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் எனவும் கட்சி மேலிடம் அவரை சமாதானம் செய்ய வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முதல்வர் பதவியில் இருந்தால் நாடாளுமன்ற தேர்தலுக்கு மாநில தலைவராக சிறப்பாக செயல்பட முடியாது என காரணம் கூறவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

5வது பிளான்: இந்த 4 பிளான்களில் ஏதேனும் ஒன்றுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என டிகே சிவக்குமாரிடம் கூறுவது. ஒருவேளை டிகே சிவக்குமார் எதற்கும் பிடி கொடுக்காவிட்டால் அவருக்கு முதல்வர் பதவி வழங்குவது பற்றி பரிசீலனை செய்வதோடு சித்தராமையா மற்றும் அவரது ஆதரவாளர்களை சமாதானப்படுத்துவது என்ற 5 பிளான்களை காங்கிரஸ் கட்சி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+