CM சித்தராமையா.. 5 தலித், 2 முஸ்லிம், 1 கிறிஸ்தவர்! “லீக்” ஆனது கர்நாடக உத்தேச அமைச்சரவை பட்டியல்
பெங்களூர்: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று இருக்கும் நிலையில், அம்மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டு இருப்பதுடன், 31 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் தயாராகி உள்ளதாகவும் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்காக வாக்குப்பதிவு கடந்த மே 10 ஆம் தேதி நடைபெற்று கடந்த மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை விட அதிகமாக 136 தொகுதிகளில் வெற்றிபெற்று இருக்கிறது.

பாஜக 65 இடங்களில் வெற்றிபெற்று உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 தொகுதிகளிலும், பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா கட்சி ஒரு தொகுதியிலும், சர்வோதயா கர்நாடகா பக்ஷா கட்சி 1 தொகுதியிலும், சுயேட்சை ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்று இருக்கின்றனர்.
இந்த நிலையில் சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே கர்நாடக முதலமைச்சர் பதவிக்கான போட்டி இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டி, முதலமைச்சரை தேர்வு செய்யும் அதிகாரத்தை தேசிய தலைமையிடம் வழங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் இரு தலைவர்களும் டெல்லிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதற்கிடையே கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா என்றும், துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் எனவும் குறிப்பிட்டு 33 பேர் கொண்ட உத்தேச அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது. அதில், பிடிஎம் லே-அவுட் எம்.எல்.ஏ. ராமலிங்கா ரெட்டி, சிரா எம்.எல்.ஏ. டி.பி. ஜெயச் சந்திரா, ஹலியால் எம்.எல்.ஏ. ஆர்.வி.தேஷ்பாண்டே, யம்கன்மர்டி எம்.எல்.ஏ., சதீஷ் லட்சுமணராவ் ஜார்கிஹோலி ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்று உள்ளனர்.
அவர்களுடன் சித்தாப்பூர் எம்.எல்.ஏ. பிரியங்க் கார்கே, பாபலேஸ்வர் எம்.எல்.ஏ. எம்.பி பாட்டீல், பால்கி எம்.எல்.ஏ, ஈஷ்வர் காந்த்ரே, கதக் எம்.எல்.ஏ., எச்.கே.பாட்டீல், தாவணகெரே வடக்கு எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன், காந்திநகர் எம்.எல்.ஏ. தினேஷ் குண்டு ராவ், ஹூவினகடஹள்ளி எம்.எல்.ஏ. பரமேஸ்வர நாயக்கா, பெங்களூர் சர்வக்ஞநகர் எம்.எல்.ஏ. கே.ஜே. ஜார்ஜ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளதாக பேச்சு உள்ளது.

பால்கி எம்.எல்.ஏ. ஈஸ்வர் கந்த்ரே, பெல்காம் கிராமப்புற தொகுதி எம்.எல்.ஏ. லக்ஷ்மி ரவீந்திர ஹெப்பால்கர், அதானி எம்.எல்.ஏ. லக்ஷ்மன் சவதி, பெங்களூர் சாம்ராஜ்பேட்டை எம்.எல்.ஏ. ஜமீர் அகமது கான், கல்கட்கி எம்.எல்.ஏ. சந்தோஷ் எஸ். லாட், விஜயநகரம் எம்.எல்.ஏ. எச்.ஆர்.கவியப்பா, தார்வாட் எம்.எல்.ஏ. வினய் குல்கர்னி, மங்களூர் எம்.எல்.ஏ. யு.டி.அப்துல் காதர் அலி ஃபரீத், பாதராயனபுரா எம்.எல்.ஏ. கிருஷ்ண பைரேகவுடா ஆகியோரது பெயர்களும் லிஸ்டில் இடம்பெற்றுள்ளன.
கொப்பல் எம்.எல்.ஏ. கே. ராகவேந்திரா அல்லது யல்புர்கா எம்.எல்.ஏ. பசவராஜ் ராயரெட்டி, பெல்லாரி எம்.எல்.ஏ. பி. நாகேந்திரா அல்லது சந்தூர்-எம்.எல்.ஏ. இ.துக்காராம், சொரபா தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.மது பங்காரப்பா, பைல்ஹோங்கல் எம்.எல்.ஏ. மஹாந்தேஷ் சிவானந்த் கவுஜலகி ஆகியோரும் உத்தேச பட்டியலில் உள்ளனர்.
அவர்களுடன் ஜேவர்கி எம்.எல்.ஏ. டாக்டர் அஜய் தரம்சிங், ஹாவேரி எம்.எல்.ஏ. ருத்ரப்பா லமணி, பயட்கி எம்.எல்.ஏ. பசவராஜ் என்.சிவண்ணனார், மதுகிரி எம்.எல்.ஏ. கே.என். ராஜண்ணா, கோலார் தங்கவயல் எம்.எல்.ஏ. ரூபாகலா, தாவணகெரே தெற்கு எம்.எல்.ஏ. ஷாமனூர் சிவசங்கரப்பா ஆகியோரின் பெயர்களும் உள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications