Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகாவில் பசவராஜ் பொம்மையின் மகன் தோல்வி.. சிக்காம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் சிக்காவி சட்டசபை தொகுதி எம்எல்ஏ பதவியை கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் பாஜக சார்பில் போட்டியிட்டுள்ள பசவராஜ் பொம்மையின் மகன் பரத் பொம்மையை காங்கிரஸ் வேட்பாளர் யாஷிர் கான் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியால் பசவராஜ் பொம்மை மீது கட்சி அதிருப்தியில் உள்ள நிலையில் மகனை சொந்த தொகுதியில் வெல்ல வைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.

கர்நாடகாவில் ஹாவேரி மாவட்டம் சிக்காவி தொகுதி உள்ளது. இது கர்நாடகா முன்னாள் முதல்வரான பாஜகவின் பசவராஜ் பொம்மையின் சொந்த தொகுதியாகும். கடந்த 2023ம் ஆண்டு இந்த தொகுதிக்கு நடந்த சட்டசபை தேர்தலில் பசவராஜ் பொம்மை போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

election results 2024 shiggaon by election results nikhil kumaraswamy

அதன்பிறகு சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பசவராஜ் பொம்மை பாஜக சார்பில் ஹாவேரி லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த லோக்சபா தேர்தலிலும் பசவராஜ் பொம்மை வெற்றி பெற்று எம்பியானார். இதனால் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இப்படியாக காலியான இந்த சிக்காவி சட்டசபை தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்தது. இதையடுத்து பாஜக சார்பில் பசவராஜ் பொம்மையின் மகன் பரத் பொம்மை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் யாஷிர் கான் வேட்பாளராக களமிறங்கினர். இருவரும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டனர்.

அதன்பிறகு கடந்த 13ம் தேதி சிக்காவி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் மொத்தம் 80.48 சதவீத ஓட்டுகள் பதிவானது. இந்த ஓட்டுகள் இன்று 18 சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற உள்ளது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்பட்டு வருகின்றன.

காலை 9.30 மணி நிலவரப்படி சிக்காம் தொகுதியில் பாஜக வேட்பாளர் பரத் பொம்மை 1,139 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். அவர் மொத்தம் 11,185 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் யாஷிர் அகமது கான் 10,046 ஓட்டுகள் பெற்று பின்தங்கினார்.

காலை 11 மணிக்கு டிரெண்ட் என்பது மாறியது. 8வது ரவுண்ட் எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் 44,557 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். பாஜக வேட்பாளர் பரத் பொம்மை 43,399 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 1,158 என்ற அளவில் உள்ளது.

18 வது மற்றும் கடைசி சுற்று எண்ணிக்கையின்போது யாஷிர் அகமது கான் மொத்தம் 1 லட்சத்து 756ஓட்டுகள் பெற்றார். பரத் பொம்மை 87,308 ஓட்டுகள் பெற்றார். இதன்மூலம் யாஷிர் அகமது கான் 13,448 ஓட்டுகள் வித்தியாசத்தில் பசவராஜ் பொம்மையின் மகன் பரத் பொம்மையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

இந்த தொகுதியின் முடிவு என்பது பசவராஜ் பொம்மையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் இருந்தது. அதாவது முதல்வராக இரண்டு ஆண்டுக்கு மேலாக பசவராஜ் பொம்மை பாஜகவில் செயல்பட்ட பிறகு கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அந்த கட்சி தோல்வியடைந்தது. காங்கிரஸ் கர்நாடகாவில் அரியணை ஏறியது. இதனால் பசவராஜ் பொம்மை மீது பாஜக மேலிடம் அதிருப்தியடைந்தது.

மேலும் அவரை மாநில அரசியலில் இருந்து மத்திய அரசியலுக்கு அழைத்து லோக்சபா தேர்தலில் வாய்ப்பு வழங்கி எம்பியாக்கியது. மத்திய அமைச்சர் பதவியும் கொடுக்காமல் அவரை வெறும் எம்பியாக்கவே பாஜக வைத்துள்ளது. தற்போது சிக்காவி இடைத்தேர்தலில் அவரது மகன் பரத் பொம்மைக்கு பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது. இதில் பரத் பொம்மை வென்றால் மட்டுமே பாஜகவில் மீண்டும் பசவராஜ் பொம்மையின் செல்வாக்கு என்பது இருக்கும் என்று கூறப்பட்டது .தற்போது அவரது மகன் தோல்வியடைந்துள்ளதால் பசவராஜ் பொம்மைக்கு அது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அக்னிபரீட்சையாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+