அடித்து தூக்கிய கார்கே மகன்.. குமாரசாமி மகன் கதி பரிதாபம்! கர்நாடகா ஸ்டார் வாரிசுகளின் நிலை என்ன?
பெங்களூர் : கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 117 இடங்களிலும், பாஜக 71 இடங்களிலும், மஜத 28 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், ஸ்டார் தலைவர்களின் வாரிசுகளின் நிலை என்ன என்பதை பார்க்கலாம்.
நிகில் குமாரசாமி பின்னடைவு : ராமநகரா தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இக்பால் உசேன் நின்றார். பாஜக சார்பில் கவுதம் மாரிலிங்ககவுடா போட்டியிட்டார்.

தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின்படி, நிகில் குமாரசாமி பின்தங்கியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் உசேன், நிகில் குமாரசாமியை விட 9,609 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
2018 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸின் இக்பால் உசேனை தோற்கடித்து, ஜேடிஎஸ் கட்சியின் தலைவர் எச்டி குமாரசாமி இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். இந்த தேர்தலில் தனது மகனை களமிறக்கினார் குமாரசாமி. இந்நிலையில், நிகில் குமாரசாமி தோல்வி முகம் கண்டு வருகிறார்.
பிரியங்க் கார்கே முன்னிலை : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகன் பிரியங்க் கார்கே சித்தாப்பூர் தொகுதியில் களமிறங்கினார். அவரை எதிர்த்து ஜேடிஎஸ் சார்பில் சுபாஷ் சந்திர ரத்தோர், பாஜக சார்பில் மணிகண்ட ரத்தோட் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின்படி, பிரியங்க் கார்கே முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளரை விட விட சுமார் 8,700 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் பிரியங்க் கார்கே.
கடந்த 2018 இல், பிரியங்க் கார்கே, பாஜகவின் வால்மிக் நாயக்கை 4,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2013 தேர்தலிலும் சித்தாப்பூர் தொகுதியில் பிரியங்க் கார்கே வெற்றி பெற்றிருந்தார்.
விஜயேந்திரா முன்னிலை : பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் கோனி போட்டியிட்டார்.
தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின்படி, விஜயேந்திரா பலமான முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அங்கு மிகக்குறைவான வாக்குகளையே பெற்றுள்ளார்.
ஷிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பா மகன் விஜேந்திரா : 19936.
காங்கிரஸ் வேட்பாளர் கோனி : 1320
சுயேட்சை வேட்பாளர் நாகராஜ கவுடா 15,603
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications