அடுத்த முதல்வர் யார்? கர்நாடக மக்களின் ஆதரவு இவருக்குதானா? முக்கிய தகவலை வெளியிட்ட சவுத் பர்ஸ்ட்
பெங்களூரு: கர்நாடகாவில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. தற்போது வரை வெளிவந்துள்ள தனியார் செய்தி ஊடகங்களின் கருத்து கணிப்பின்படி 2 ஊடகங்கள் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறியுள்ளது. மற்ற 2 ஊடகங்கள் காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறியுள்ளது. இந்நிலையில் மக்கள் விரும்பும் முதலமைச்சர் யார் என்பது குறித்து சவுத் பர்ஸ்ட் செய்தி ஊடகம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
தென்னிந்தியாவின் மிக முக்கியமான மாநிலமான கர்நாடகாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 2,427 ஆண்கள், 184 பெண்கள் மற்றும் 2 மாற்று பாலினத்தை சேர்ந்தவர்கள் என மொத்தம் 2,613 பேர் வேட்பாளர்களாக களம் கண்டுள்ளனர்.
இதில் பாஜக சார்பில் 224, காங்கிரஸ் சார்பில் 223, மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் 207, ஆம் ஆத்மி 209, பகுஜன் சமாஜ்வாடி கட்சி 133, சிபிஎம் 4, ஜனதா தளம் 8, பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியிலிருந்து 685 பேர் மற்றும் சுயேட்சையாக 918 பேர் போட்டியிட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு வாக்காளர் எண்ணிக்கை 5.31 கோடியாகும். இதில் 16 லட்சம் பேர் முதல் தலைமுறை வாக்காளர்களாவார்கள். இவர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க தேர்தல் ஆணையம் வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் இதுபோன்ற வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. அந்த வகையில் தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சிக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இன்று காலை 7 மணியளவில் தொடங்கிய வாக்குப்பதிவானது மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. வாக்குபதிவு தொடங்கியவுடன் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
காலை 9 மணி நிலவரப்படி 8.21 சதவிகிதமாக பதிவாகியிருந்த வாக்குகள் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.03 சதவிகிதமாகவும், மாலை 5 மணி நிலவரப்படி 65.7 சதவிகிதமாகவும் வாக்குகள் பதிவாகியுள்ளது. முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 65% பேர் வாக்களித்திருந்தனர். இதே 2013ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 71.45 சதவிகிதமாகவும் 2018ம் ஆண்டு 72.36 சதவிகிதமாகவும் பதிவாகியிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு எத்தனை சதவிகிதம் வாக்குப்பதிவு இருக்கும் என்பது மிகுந்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Recommended Video
கடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கா நிலையில் காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் ஆட்சி கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. ஆயினும் சில எம்எல்ஏக்கள் பாஜக வசம் தாவியதால் ஆட்சி கவிழ்ந்தது. பாஜக ஆட்சியை கைப்பற்றியது. எனவே இம்முறை காங்கிரஸ்-பாஜக-மதசார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் இன்று பல இடங்களில் மோதல் சம்பவங்கள் நடந்துள்ளன. மாண்டியா மாவட்டத்தில் உள்ள நாராயணபுரா கிராமத்தில் வாக்குச்சாவடிக்கு வெளியே காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள உறுப்பினர் ஒவர் மீது ஒருவர் தாக்குதல் தொடுத்திருந்தனர்.
அதேபோல பெங்களுரு தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேகுர் வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக தொண்டர்கள் தேர்தல் விதிகளை மீறி நோட்டீஸ் கொடுத்து வாக்குகளை சேகரித்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மட்டுமல்லாது இந்த தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மற்றொரு சம்பவமும் வாக்குப்பதிவு களத்தை பரபரப்பாக்கியுள்ளது. அதாவது விஜயபுரா மாவட்டம் பசவன் பகேவாடி தாலூக்காவில் உள்ள மசபினாலா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு முடியாத நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது. இந்த சலசலப்புகளுக்கு இடையேதான் இன்று எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
அதன்படி ABP செய்தி ஊடகம் பாஜக - 83-95 சீட்களை ஜெயிக்கும் என்று கணித்திருக்கிறது. அதே காங்கிரஸுக்கு 100-112, மதச்சார்பற்ற ஜனதாதளம் 21-29 மற்றவை 2-6 இடங்களை வெல்லும் என கணித்துள்ளது. அதேபோல India TV-CNX பாஜகவுக்கு 80 முதல் 90 சீட்கள் கிடைக்கும் என்று கணித்திருக்கு காங்கிரசுக்கு 110-120, மதச்சார்பற்ற ஜனதாதளம் 20-24 மற்றவை 1-3 வெல்லும் என கணித்துள்ளது. இப்படியாக பல்வேறு செய்தி ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் மக்கள் விரும்பும் முதலமைச்சர் யார் என்பது குறித்த அறிவிப்பை சவுத் பர்ஸ்ட் எனும் செய்தி ஊடகம் வெளியிடட்டுள்ளது. அதன்படி சித்தராமையா மீண்டும் முதலமைச்சராக 42 சதவிகித மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோல தற்போதைய முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு 24 சதவிகித மக்கள் ஆதரவளித்துள்ளனர். இவரைத் தொடர்ந்து குமாரசாமிக்கு 17 சதவிகித மக்களும், எடியூரப்பாவுக்கு 14 சதவிகித மக்களும் ஆதரவளித்துள்ளனர். இந்த தேர்தலில் அதிக இடங்களை காங்கிரஸ் வெல்லும் என்று தேர்தலுக்கு முன்பு இருந்து கருத்து கணிப்புகள் வெளியாகிக்கொண்டிருந்தன. இப்படி இருக்கையில் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் மீது அனைவருக்கும் ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சவுத் பர்ஸ்ட் ஊடகம் நடத்திய கருத்துக்கணிப்பில் சிவகுமார் முதலமைச்சர் ஆக வெறும் 3 சதவிகிம் பேர் மட்டுமே ஆதரவளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications