இறக்கையில் தெறித்த தீப்பொறி.. பெங்களூர் இண்டிகோ விமானத்தில் நூலிழையில் தப்பிய 236 பயணிகள்
பெங்களூர்: கர்நாடகாவின் மங்களூரில் இருந்து இண்டிகோ விமானம் பெங்களூருவுக்கு புறப்பட்டது. விமான நிலைய ஓடுபாதையில் வேகமாக சென்றபோது விமானத்தின் இறக்கையில் இருந்து தீப்பொறி பறந்த நிலையில் பைலட் சுதாரித்து கொண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலையில் இண்டிகோ விமானம் பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு புறப்பட்டது.
இந்த விமானத்தில் விமானத்தில் மொத்தம் 229 பயணிகள், 7 பணியாளர்கள் என்று மொத்தம் 236 பேர் இருந்தனர். மங்களூர் விமான நிலைய ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்பட்டது.
ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தபோதே விமானத்தின் இறக்கையில் இருந்து தீப்பொறி விட்விட்டு பறந்தது. இதுபற்றி அறிந்த பைலட் உடனடியாக 'பிரேக்' பிடித்தார். இதனால் விமானம் ஓடுபாதையில் இருந்து மேலே எழும்புவதற்குள் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த விமானத்தின் கர்நாடகா மாநில பாஜக முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல் உள்பட இன்னும் சில முக்கிய நபர்கள் பயணித்தனர். விமானம் நிறுத்தப்பட்டதால் உடனடியாக அனைத்து பயணிகள் இறங்கி சென்றனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Click it and Unblock the Notifications
