என் உயிருக்கு ஆபத்து.. எச் டி குமாரசாமி மீது சுமலதா அம்பரீஷ் பரபரப்பு புகார்
பெங்களூர்: மாண்டியா தொகுதியில் முதல்வர் குமாரசாமியின் மகனை எதிர்த்து போட்டியிடும் நடிகை சுமலதா தனது உயிருக்கு ஆபத்து என புகார் அளித்தார்.
பெங்களூரைச் சேர்ந்தவர் சுமலதா. இவர் தமிழில் முரட்டுக் காளை, கழுகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இந்தி, மலையாளம், கன்னடம் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் 1991-ஆம் ஆண்டு கன்னட நடிகர் அம்பரீஷை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அம்பரீஷ் மாண்டியா தொகுதி எம்பியாக இருந்தார்.

சுமலதா
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அம்பரீஷ் மரணமடைந்தார். இதையடுத்து காங்கிரஸ் சார்பில் மாண்டியா தொகுதியில் சுமலதா போட்டியிடுவார் என கூறப்பட்டது.

காங்கிரஸ்
ஆனால் அவர் சுயேச்சையாக அத்தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு பாஜக ஆதரவு அளிக்கிறது. அவரை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணி சார்பில் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

எதிர்க்கட்சியினர்
இந்த நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சுமலதா பகீர் புகாரை அளித்துள்ளார். அவர் கூறுகையில் தனது மகன் நிகில் தோற்றுவிடுவார் என்ற அச்சத்தில் குமாரசாமி எதிர்க்கட்சியினரை அச்சுறுத்துகிறார்.

ஆபத்து
எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வரும் எனது மகன் அபிஷேக் கவுடா, நடிகர்கள் தர்ஷன், யஷ் உள்ளிட்டோரை அச்சுறுத்தி வருகிறார். இறுதி கட்ட பிரசாரத்தின் போது என் மீது கல்வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் எனது உயிருக்கு ஆபத்துள்ளதால் பாதுகாப்பு கேட்க முடிவு செய்துள்ளேன் என்றார் சுமலதா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications