தொட்டு தொட்டு கன்னத்தில் "முத்தம்".. பிரதமர் மோடியின் போட்டோவை, கொஞ்சி தள்ளிய விவசாயி.. எமோஷனல் வேற
பெங்களூரு: கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரசும், ஆட்சியை தக்கவைக்க பாஜகவும் மும்முரமாகி வரும்நிலையில், ஒரு முத்த வீடியோ இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது. என்னவாம்?
1985ம் ஆண்டு முதல் கர்நாடக மாநிலத்தில் எந்த அரசியல் கட்சியும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததில்லை... அந்த வரலாற்றை முதல்முறையாக மாற்றி அமைக்க பாஜக தயாராகி கொண்டிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி எண்ணப்பட உள்ளது.

சலசலப்பு
இந்த முறையும் காங்கிரஸ் கட்சி அங்கு தனித்து போட்டியிடுகிறது... எப்படியாவது இந்த முறை கர்நாடகத்தில் ஆட்சி அமைந்துவிட வேண்டும் என்பதிலும் முனைப்புகளை காட்டி வருகிறது.. அதனால்தான், தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் லிஸ்ட்டை வெளியிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கியது.. அந்தவகையில், ராகுல் காந்தி அடுத்த மாதம் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்... அதிலும், கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து பேசி சலசலப்பை ஏற்படுத்திய அதே கோலார் பகுதியில்தான், அடுத்த மாதம் 5ம் தேதி முதல் பிரச்சார கூட்டத்தை நடத்துகிறார்..

படு ஸ்பீடு
அதே மாநிலத்தில், அதே இடத்தில், இந்த முறையும் பிரச்சாரம் நடப்பதால், ராகுல் காந்தியின் பிரச்சாரம் இப்போதே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. ஆனால், பாஜகவோ படுஸ்பீடில் களத்தில் இறங்கிவிட்டது.. ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு ஒட்டுமொத்த வியூகங்களையும் கர்நாடகாவில் இறக்கி உள்ளது.. காரணம், தென் மாநிலங்களிலேயே, பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா மட்டும்தான்... கடந்தமுறை தேர்தலின்போதே பாஜக நிறைய விமர்சனத்துக்கு ஆளாகியிருந்தது.. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைத்ததாக புகார்கள் வெடித்து கிளம்பின.. அதனால்தான் இந்த முறை பாஜகவின் செயல்பாடுகள் பலராலும் உற்றுகவனிக்கப்பட்டு வருகிறது.

40% கமிஷன்
அநேகமாக இந்த முறையும் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள்.. ஏற்கனவே, அரசின் டெண்டர்களை எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு 40 சதவிகித கமிஷன், முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரங்கள், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு ரத்து, வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் என மக்களை பாதிக்கக்கூடிய பல பிரச்சனைகள் கர்நாடகாவில் உருவெடுத்து, பாஜகவுக்கு நெருக்கடியை தந்து கொண்டிருக்கிறது..

காலி கணக்கு
அதற்கேற்றவாறு, கர்நாடகா டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, பாஜக 107, காங்கிரஸ் 75, மதச்சார்பற்ற ஜனதா தளம் 36, மற்றவை 6 என வெற்றி பெறக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது... அதேபோல, சிவோட்டர் கருத்து கணிப்புப்படி, கணிப்புகளில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் இப்போதைய பாஜக ஆட்சியை விரும்பவில்லை என்று கூறியுள்ளனர். பாஜக மீதான அதிருப்திகள் இப்படி வெளிப்பட்டு வரும்நிலையில், ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. கர்நாடக மாநில அரசு பஸ் ஒன்றில், பிரதமர் மோடியின் போட்டோ ஒட்டப்பட்டிருந்தது.. அதாவது, ஜி20 மாநாட்டின் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் உருவப்படம் இடம்பெற்றிருக்கிறது..

முத்தமழை
அந்த போட்டோவிற்கு வயதான விவசாயி ஒருவர் முத்தமிட்டார்.. அந்த பஸ்ஸின் பக்கவாட்டில் மோடி போட்டோ உள்ளது.. அதன் அருகே சென்று நின்று, போட்டோவில் உள்ள பிரதமர் முகத்தை, ஒருமுறை கையால் தடவி தடவி பார்க்கிறார்.. பிறகு, கன்னத்தை தொட்டு தொட்டு முத்தம் தருகிறார்.. மறுபடியும் முகத்தை தடவிவிட்டு, போட்டோவுடன் தானாகவே பேசுகிறார்.. "வயதானவர்களுக்கெல்லாம் தபால் கணக்கில் 1000 ரூபாய் தருவதாக சொன்னீங்க.. பிறகு, அதனை மேலும் 500 ரூபாய் உயர்த்திவிட்டீர்கள்.. நாங்கள் உடல்நலத்தை பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக, வருடத்துக்கு ரூ.5 லட்சம் ஒதுக்கி இருக்கிறீர்கள்" என்றெல்லாம் சொல்லி பிரதமருக்கு நன்றி கூறுகிறார் அந்த விவசாயி..

எமோஷனல்
பிரதமரின் போட்டோவை பார்த்தபடியே, அவர் செய்த நன்மைகளை லிஸ்ட் போடுகிறார்.. பிறகு போட்டோவுக்கு முத்தமழை பொழிகிறார்.. பிரதமரை பாராட்டி கொண்டே வரும்போது, திடீரென விவசாயி உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார்.. பிறகு, பிரதமரின் 2 கன்னத்திலும் மாறி மாறி முத்தம் தருகிறார்.. அந்த போட்டோவை 3 முறை தொட்டு தொட்டு கும்பிட்டுக் கொள்கிறார்.. பஸ் ஸ்டாண்டில் நடந்த சம்பவத்தை, அங்கிருக்கும் பொதுமக்கள் அனைவருமே பார்த்துசென்றனர்.. இந்த வீடியோதான் இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications