தூள் தூளா போகுதா கணக்கு? சர்ப்ரைஸ் தரும் சித்தராமையா? கர்நாடக சட்டசபை பட்ஜெட் தாக்கல்.. ரெடியான பாஜக
பெங்களூரு: 2024-25-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா இன்று தாக்கல் செய்கிறார். 15-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் சித்தராமையா.
கர்நாடகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 12-ந் தேதி தொடங்கியது... அந்தவகையில், நடப்பு ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது... நிதித்துறையை தன் வசம் வைத்துள்ள சித்தராமையா, இன்று காலை 10.15 மணிக்கு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

பட்ஜெட்: கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, உத்தரவாத திட்டங்களுக்கு சுமார் ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கப்படலாம் என்றும், சுகாதாரம், பள்ளி கல்வி, நீர்ப்பாசனத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது..
எதிர்பார்ப்புகள்: மாநில அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் தலைநகர் பெங்களூருவின் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, பெங்களூருவில் புதிய மெட்ரோ ரெயில் திட்டங்கள், சாலை மேம்பாட்டு திட்டங்கள், மேம்பாலங்கள் கட்டும் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
இன்னொன்றையும் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.. எம்பி தேர்தல் விரைவில் வரப்போகிறது.. எனவே, இந்த கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி காங்கிரஸ் அரசை நெருக்கடியில் சிக்க வைக்க கூட்டணி கட்சிகளான பாஜக + ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தீர்மானித்துள்ளன.. அதிலும் 40 சதவீத கமிஷன் விவகாரத்தை பாஜக கையிலெடுக்க போவதாக தெரிகிறது.
பரபரப்பு: வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்வதில் தாமதம், மின்தட்டுப்பாடு, குடிநீர் பிரச்சனை, உத்தரவாத திட்டங்களால் வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் இருப்பது, எம்எல்ஏக்கள் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் போன்ற பிரச்சனைகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும், சட்டசபையில் கூட்டணி கட்சிகள் தயாராக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.. வருகிற 23-ந் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது.
அதேசமயம், நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படமாட்டாது என்றே சொல்லப்படுகிறது... மேலும், உத்தரவாத திட்டங்கள் என்ற பெயரில் இலவச திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு விட்டதால், இதில் கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம்பெற வாய்ப்பு இல்லை என்றும் சொல்கிறார்கள்.
மேகாது: அதுமட்டுமல்ல, காங்கிரசின் 5 வாக்குறுதி திட்டங்களால், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்... எனவேதான், பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் அறிவிக்கும் பட்சத்தில் நிதி திரட்டுவதற்கு எத்தகைய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, எம்பி தேர்தலை கருத்தில் கொண்டு, அதே போன்று பட்ஜெட்டில் நாடகம் ஆட முயற்சிக்கிறார் சித்தராமையா. ஆனால், மாநிலத்தின் மக்கள் புத்திசாலிகள். அவர்களை அடிக்கடி ஏமாற்ற முடியாது. ஆட்சிக்கு வந்து 9 மாதங்களாகியும் எந்த வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை. அரசு கஜானா காலியாகிவிட்டது. திட்டங்கள் சரியாக நிறைவேற்றப்படவில்லை என்று கூறியிருந்தார்.
எதிர்பார்ப்பு: அந்தவகையில், இந்த பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மேகதாது அணை விவகாரம் குறித்த விவகாரமும் கூட்டத்தொடரில் எதிர்பார்க்கப்படுகிறது. மேகதாது அணை திட்ட அறிக்கை பற்றி விவாதிக்க கர்நாடகம் வலியுறுத்தியிருந்த நிலையில், மேகதாது பற்றி விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என தமிழ்நாடு அரசும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications