Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடக தேர்தலில் இறங்கிய அமுதா ஏஐஎஸ் கணவர்! காங். மஜத வேட்பாளர்கள் காலி! அடேங்கப்பா வேற லெவல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான அமுதா ஏஐஎஸின் கணவர் கர்நாடக தேர்தலில் போட்டியிட்டு முக்கிய கட்சிகளுக்கே டப் கொடுத்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த புதன்கிழமை சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அங்கே மொத்தம் இருக்கும் 220 தொகுதிகளிலும் ஒரே கட்டமாகக் கடந்த புதன்கிழமை சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.

சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது, பாஜக முன்னிலையில் இருப்பது போலத் தெரிந்தது. ஆனால், அதன் பின்னர் காங்கிரஸ் ரேசில் முந்தியது.

Tamil Nadu IAS officer Amudha Husband make his mark very strong in Karnataka election

கர்நாடக தேர்தலில் பல தொகுதிகளில் ஷாக் முடிவுகள் வந்தது. கர்நாடக சபாநாயகர், முக்கிய அமைச்சர்கள் எனப் பலரும் தேர்தல்களில் தோல்வி அடைந்தனர். கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் பாஜக மீதே அனைவரது கவனமும் இருக்கும் நிலையில், அங்கே தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய ஐஏஎஸ் அதிகாரியின் கணவரும் சத்தமே இல்லாமல் சாதனை படைத்துள்ளார். அவர் பிரதான கட்சிகளும் நெருக்கடி கொடுத்து வருகிறார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில், அங்குப் போட்டியிட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் கணவர் 30%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று பிரதான கட்சிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழக ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளராக இருந்தவர் அமுதா ஐ.ஏ.எஸ். இவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இன்று முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த அமுதா, உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிரதமர் அலுவலகத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றி தமிழ்நாடு திரும்பியவர்.

தமிழ்நாட்டில் இருக்கும் முக்கியமான ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரா அமுதா ஐஏஎஸ் இருக்கிறார். சமீபத்தில் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகள் பற்களைப் பிடுங்கிய விவகாரத்திலும் கூட, அமுதா ஐஏஎஸ் தான் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே அமுதாவின் கணவர் ஷம்பு கலோலிகர். 58 வயதான இவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தவர். இவர் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் ரெய்பேக் ஒன்றியத்தில் உள்ள யபரட்டி என்ற ஊரை சேர்ந்தவர். சேர்ந்தவர். 1991 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், தமிழக கதர் மற்றும் கைவினைப் பொருட்கள் துறையின் இணைச் செயலாளராக இருந்து, சமீபத்தில் தான் விருப்ப ஓய்வைப் பெற்றிருந்தார்.

ஓய்வு பெறும் முன்பு 30 ஆண்டுகள் ஐஏஎஸ் அகிராரியாக பல்வேறு துறைகளில் பணியாற்றியவர். ஆட்சிப் பணிக்கு வரும் முன், மத்திய பெட்ரோலியம் துறையின் இயக்குநராகவும் இருந்துள்ளார். தனது சொந்த ஊரில் மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பதை அறிந்த அவர், தனது தேவையான வசதிகளைச் செய்ய முடிவு செய்தார். கர்நாடக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே அவர் 2022 இறுதியில் விருப்ப ஓய்வு பெற்றார்.

Tamil Nadu IAS officer Amudha Husband make his mark very strong in Karnataka election

இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸை சேர்ந்தவர்களாக அறியப்படுகின்றனர். இவருடைய உறவினர்களும் அரசியல் சார்ந்த பதவிகளில் இருந்துள்ளனர்.. ஷம்பு கலோலிகர் காங்கிரஸ் சார்பிலேயே முதலில் ரெய்பேக் போட்டியிட விரும்பியதாகத் தெரிகிறது. இருப்பினும், அங்கே அவருக்குப் போட்டியிட சீட் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் சுயேட்சையாக களமிறங்க முடிவு செய்தார்.

அதன்படி சுயேச்சையாக இறங்கிய ஷம்பு கலோலிகர் தனது தொகுதியில் தீவிர பிரசாரம் செய்தார். அவருக்கு மக்களிடையே மிகப் பெரியளவில் ஆதரவு கிடைத்தது. இதனிடையே இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், அதில் ஷம்பு கல்லோலிகர் முக்கிய கட்சியை சேர்ந்தவர்களுக்கும் கடும் போட்டி அளித்தார்.

தற்போது வரை அந்தத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஐஹோலே துரியோதன் மகாலிங்கப்பா 57100 வாக்குகளைப் பெற்றார். அதேநேரம் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஷம்பு கல்லோலிகர் 57400 வாக்குகளைப் பெற்று கடும் போட்டி கொடுத்தார். அவர் தான் அங்கே இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளார். காங்கிரஸ் மஜத வேட்பாளர்கள் கூட சுமார் 23 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+