Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நந்தீஷ் உடலை கண்டுபிடிக்க உதவிய அம்பேத்கர் படம் போட்ட டீ சர்ட்.. ஒசூர் ஆணவ கொலையில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஜாதி மாறி திருமணம் செய்த காதல் ஜோடி காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு- வீடியோ

    பெங்களூர்: அம்பேத்கர் படம் அச்சிடப்பட்ட டி-சர்ட் மூலமாக ஆணவ கொலைக்கு உள்ளாக்கப்பட்ட நந்தீஷ் உடலை கர்நாடக போலீசார் கண்டுபிடித்தனர்.

    ஓசூரை அடுத்துள்ள சூடகொண்டப்பள்ளியை சேர்ந்த நந்தீஷ் (25) மற்றும் அதே ஊரை சேர்ந்த சுவாதியும் (21) 4 ஆண்டுகளாக காதலித்த நிலையில், திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்த திருமணத்திற்கு சுவாதியின் தந்தை சீனிவாசன் ஒப்புக்கொள்ளவில்லை.

    எனவே, கடந்த ஆகஸ்ட் மாதம், வீட்டை விட்டு வெளியேறிய சுவாதி, நந்தீஷை திருமணம் செய்துள்ளார். மறுபடியும் ஊருக்குப் போனால் சுவாதி குடும்பத்தால் பெரிய பிரச்சினையாகும் என்பதால் இருவரும் ஒசூர் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வாழ்ந்து வந்தனர்.

    கமல்ஹாசன் நிகழ்ச்சி

    கமல்ஹாசன் நிகழ்ச்சி

    இதன்பிறகு செப்டம்பர் 4ம் தேதி நந்தீஷ் மற்றும் சுவாதி தங்களது திருமணத்தை சூளகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர். அப்போதுதான் அவர்கள் காதல் வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது. நவம்பர் 10ம் தேதி ஓசூருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ‘மக்களுடனான பயணம்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளார். அந்த நிகழ்ச்சியை நேரில் பார்க்க சுவாதி விரும்பியுள்ளார். அதுவரை, 'தலைமறைவாக' வாழ்ந்து வந்த நந்தீஷ்-சுவாதி தம்பதி முதல் முறையாக, ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது அப்போதுதான்.

    பார்த்துவிட்ட உறவினர்கள்

    பார்த்துவிட்ட உறவினர்கள்

    கமல்ஹாசன் நிகழ்ச்சிக்கு சுவாதியின் உறவினர்கள் கிருஷ்ணன் (26), வெங்கட் ராஜ் (25) ஆகியோரும் வந்துள்ளனர். அவர்கள், நந்தீஷையும், சுவாதியையும் ஒன்றாக இருப்பதை பார்த்துவிட்டனர். இதுபற்றி நைசாக சுவாதியின் தந்தைக்கு தகவல் கொடுத்தன‌ர். கோபத்தில் இருநத் சுவாதியின் தந்தை சீனிவாசன் (40), பெரியப்பாக்களான அஸ்வதப்பா (45) மற்றும் வெங்கடேஷ் (43) ஆகியோர், சாமிநாதன் (30) என்பவரின் காரை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு ஒசூர் விரைந்துள்ளனர்.

    சென்டிமென்ட் டிராமா

    சென்டிமென்ட் டிராமா

    சுவாதியையும், நந்தீஷையும் நேரில் பார்த்ததும், கண்ணீர் விட்டு அழுவதைப் போல நடித்த சீனிவாசன், இருவரையும் ஏற்றுக்கொள்வதாகவும், வீட்டுக்கு வாருங்கள் என்றும் கூறி அழைத்துள்ளார். இதை நம்பிய சுவாதி, நந்தீஷை தனது தந்தை கூறியபடி செய்ய சொல்லியுள்ளார். எனவே, இருவரும், காரில் ஏறியுள்ளனர். ஆனால் கார், கர்நாடக மாநில எல்லைக்குள் சென்று, பெங்களூருக்கு முன்பாக நைஸ் புறநகர் ரோடு வழியாக பயணித்தது.

    கர்நாடகாவிற்கு என்ட்ரி

    கர்நாடகாவிற்கு என்ட்ரி

    சந்தேகமடைந்த நந்தீஷ், ஏன் இங்கே போகிறீர்கள் என்று கேட்டதற்கு, பெங்களூரை தாண்டி, ராம்நகரில் அனுமான் கோயில் உள்ளதாகவும், அங்கே உங்களுக்கு முறைப்படி நாங்களே திருமணம் செய்து வைக்கிறோம் என்றும் கூறியுள்ளார் சீனிவாசன். சந்தேகமடைந்த நந்தீஷ், காரை நிறுத்த சொன்னபோது, சீனிவாசன் உள்ளிட்டோர், தங்களிடம் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து நந்தீஷையும், சுவாதியையும், தாக்கியுள்ளனர்.

    மோசமான கொலை

    மோசமான கொலை

    மண்டியா அருகேயுள்ள சிவனசமுத்ரா நீர்வீழ்ச்சி பகுதிக்கு இருவரையும் அழைத்துச் சென்று, நந்தீஷையும், சுவாதியையும் கடுமையாக தாக்கி தலையை வெட்டி கொன்றுள்ளனர். சுவாதி வயிற்றில் 3 மாத சிசு இருப்பதாக கேள்விப்பட்டு அவரது தந்தையும், பெரியப்பா உள்ளிட்டோரும், சுவாதி அடிவயிறு பகுதியை அடித்து சிதைத்துள்ளனர். இருவரின் கை, கால்களை துணியால் கட்டி, ஆற்றில் வீசிவிட்டு, ஊர் திரும்பியுள்ள‌னர்.

    டி சர்ட்

    டி சர்ட்

    இந்த நிலையில், 11ம் தேதி நந்தீஷ் தம்பி சங்கர், தனது அண்ணனையும், அண்ணியையும் காணவில்லை என்று ஒசூர் போலீசில் புகார் அளித்தார். கடந்த 13ம் தேதி நந்தீஷ் உடல் ஆற்றில் கர்நாடக போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் அழுகியிருந்ததால் முகம் அடையாளம் தெரியவில்லை. அவர் அணிந்திருந்த நீல நிற டீ-சர்ட்டில், அம்பேத்கர் படம் பொறிக்கப்பட்டு, 'சூடகொண்டப்பள்ளி, ஜெய்பீம்' என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இதை வைத்துதான் கர்நாடக போலீசார் துப்பு துலக்கி, தமிழக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 15ம் தேதி, நந்தீஷின் சடலம் மிதந்த அதே இடத்தில் சுவாதியின் சடலமும் மிதந்ததும், கொலை நடந்ததை உறுதி செய்த போலீசார் சீனிவாசன், வெங்கடேஷ், அஸ்வதப்பா, உறவினர்கள் கிருஷ்ணன் (26), வெங்கட்ராஜ் (25), கார் உரிமையாளர் சாமி நாதன் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து, சீனிவாசன், வெங்கடேஷ், கிருஷ்ணா ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+