தமிழர்கள் சுட்டுக்கொலை.. ஸ்டிக்கர் கூட கிழியாத புது செருப்பை ஆதாரமாக கொண்டு வந்த கர்நாடக வனத்துறை
பெங்களூர்: கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் மூன்று பேர் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழநாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், என்கவுண்டரில் சுட்டூ கொல்லப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கத்தி, செருப்பு, டார்ஸ் லைட் உள்ளிட்ட பொருட்களை ஆதாரம் என கர்நாடக வனத்துறை வெளியிட்டது. இதில், செருப்பு ஒன்று புத்தம் புதிதாக விலை ஸ்டிக்கர் கூட கிழிக்காமல் இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணலாய பகுதியில் கடந்த 15 ஆம் தேதி தமிழர்கள் மூன்று பேரை கர்நாடக வனத்துறை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றது. மான் வேட்டையாட சென்றதாகவும், அவர்களை தேடி வனத்திற்குள் சென்ற போது, நாட்டு துப்பாக்கியால் வேட்டைக்கு சென்றவர்கள் சுட்டதால், தற்காப்புக்காக திருப்பி நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேரும் உயிரிழந்துவிட்ட்தாக கர்நாடகா கூறி வருகிறது.

தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை
ஆனால், வளர்த்து வந்த மாடுகளை தேடியே வனப்பகுதிக்குள் சென்றதாகவும் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று தமிழர்களின் குடும்பத்தினரும் தெரிவித்தனர். கர்நாடக வனத்துறையால் கொல்லப்பட்ட மூன்று பேரும் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கர்நாடகாவில் செட்டில் ஆனவர்கள் என தெரியவந்தது.
அந்தோணி சாமி, பீட்டர் மற்றும் குமார் கர்நாடகாவின் ஹானூர் அருகே உள்ள தொமியார்பாளையா கிராமத்தில் வசித்து வந்துள்ளனர். தமிழர்கள் மூன்று பேர் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழநாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது ஒரு போலி என்கவுண்ட்டர் என்ற குற்றச்சாட்டு அதிகரித்து வரும் நிலையில், தமிழகர்கள் மீதான துப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
விலை ஸ்டிக்கர் கிழிக்காமல் செருப்பு
நேற்று தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் இது பற்றி கொண்டு வரப்பட்டது. இதனால், கோபம் ஆன கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார், தமிழக தலைவர்கள் தங்கள் வேலையை பார்க்கட்டும். எங்கள் மாநில விஷயங்களில் தலையிட வேண்டாம் என்று பேசியிருந்ந்தார். இது ஒருபக்கம் இருக்க என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஆதாரம் என கர்நாடக வனத்துறை வெளியிட்டது.
ஏற்கனவே 34 கிலோ மான் இறைச்சி மற்றும் 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக வனத்துறை கூறிய நிலையில், கத்திகள், டார்ச் லைட்டுகள், மீன் வலைகள் மற்றும் செருப்புகள் உள்ளிட்ட கூடுதல் பொருட்களை வெளியிட்டது. இதில் கர்நாடக வனத்துறை வெளியிட்ட செருப்பு ஒன்று புத்தம் புதிதாக விலை ஸ்டிக்கர் கூட கிழிக்காமல் இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தப்பி வந்தவர் வெளியிட்ட வீடியோ
இதை வைத்து பார்க்கும் போது வனத்துறை போலி என்கவுண்டர்தான் செய்ததா? என்ற சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே கர்நாடக வனத்துறை நடத்திய என்கவுண்டரின் போது தப்பி ஓடி தலைமறைவான மகிதா என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், வனத்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் நானும் காயம் அடைந்தேன்.
தற்போது என்னால் பொது வெளியில் வர முடியவில்லை. எனக்கு வெளியில் வரவே பயமாக உள்ளது. எனது குடும்பத்தினர் உறவினர்க்ளிடம் என்னை பற்றி விசாரித்து இருக்கிறார்கள்"என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications
