ராமர் கோவில் திறப்பு நாளில் பெங்களூரில் சம்பவத்துக்கு சதித் திட்டம் தீட்டிய பயங்கரவாதிகள்-என்ஐஏ ஷாக்
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை தகர்க்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டி இருந்ததாக தேசிய புலனாய்வு ஏஜென்சி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜென்சி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இந்த அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பெங்களூர் ஒயிட்பீல்டு அருகே உள்ள ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் கடந்த மார்ச் மாதம் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்புகளில் மொத்தம் 9 பேர் படுகாயமடைந்தனர். நாட்டையே இந்த குண்டு வெடிப்புகள் அதிர வைத்தன.

இந்த குண்டு வெடிப்பு வழக்கை தேசியப் புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. விசாரித்தது. மேற்கு வங்க மாநிலத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் முசாவீர் உசேன் சாஜிப், அகமது தாகா ஆகியோர் முதலில் பிடிபட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கூட்டாளிகள் 2 பேர் குறித்த தகவல்களும் கிடைத்தன. அவர்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்த பயங்கரவாதிகள் தங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
தற்போது ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் விசாரணையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நிறைவு செய்துள்ளனர். இதனையடுத்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு தொடர்பான என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகையின் முக்கிய அம்சங்கள்:
- கர்நாடகா சிவமொக்காவை சேர்ந்த முசாவீர், அப்துல் மதீன் இருவரும் சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு ஆட்சேர்ப்பில் ஈடுபட்டவர்கள்.
- வங்கதேச நாட்டின் அடையாள அட்டைகளையும் பயங்கரவாதிகள் வைத்திருந்தனர்.
- அயோத்தி ராமர் கோவில் திறப்பின் போது கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி பெங்களூர் பாஜக தலைமை அலுவலகத்தை குண்டு வைத்து தகர்க்கவும் பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டி இருந்தனர்.
- பாஜக தலைமை அலுவலகத்தை தகர்க்க முடியாமல் போனதால் ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இவ்வாறு தேசிய புலனாய்வு ஏஜென்சியின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications