ஆசையாக காரின் சன்ரூப்பில் நின்ற சிறுவன்.. அடுத்த நொடியே பெங்களூரில் நேர்ந்த சோகம்.. ஷாக் வீடியோ
பெங்களூர்: பெங்களூரில் காரின் சன்ரூப் வழியாக தலையை வெளியே நீட்டி வேடிக்கை பார்த்து சென்ற சிறுவனின் தலை சாலையின் குறுக்காக இருந்த இரும்பு கம்பியில் முட்டியது. இதில் சிறுவன் நிலைக்குலைந்து போனான். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடை செய்துள்ளது.
ஒவ்வொருவருக்கும் சொந்தமாக கார் வாங்கி அதில் சொகுசாக பயணிக்க வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. மேலும் பலரும் தங்களுக்கும் பிடித்த காரை வாங்கி பயணித்து வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்களின் வருமானத்துக்கு ஏற்ப சொகுசு கார்களை வாங்கி வருகின்றனர்.

மேலும் சிறுவர்கள் முதல் இளம் வயதினர் பலரும் சன்ரூப் வசதி கொண்ட கார்களை வாங்கி பயணித்து வருகின்றனர். கார் பயணித்து கொண்டு இருக்கும்போதே பலரும் சன்ரூப் வழியாக காரின் மேற்பகுதிக்கு வந்து ரசிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இது மகிழ்ச்சியை தந்தாலும் கூட ஆபத்துகள் நிறைய உள்ளன. சன்ரூப் வழியாக வெளியே தலையை நீட்டி பயணிக்கும்போது சாலையில் பறக்கும் வண்டுகள் முகத்தில் வந்து கடிக்கலாம். பூச்சிகள் கண்களில் விழலாம். இது உடல்நல பிரச்சனைகளை தரலாம். இதனால் சன்ரூப்பை பயன்படுத்தி பயணிப்பது ஆபத்தானதாக உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அந்த வீடியோவில் சிவப்பு நிற கார் பெங்களூர் வித்யாரண்புராவில் சென்று கொண்டிருக்கிறது. அப்போது காரின் சன்ரூப் வழியாக தலையை வெளியே நீட்டி சிறுவன் ஒருவன் பயணிக்கிறான்.
Next time when you leave your kids popping their heads out, think once again! pic.twitter.com/aiuHQ62XN1
— ThirdEye (@3rdEyeDude) September 7, 2025
அப்போது ஒரு இடத்தில் உயரம் அதிகமான வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் சாலையின் குறுக்காக இரும்பு கம்பு பொருத்தப்பட்டு இருந்தது. கார் அந்த கம்பியை கடக்கும்போது சன்ரூப் மீது தலையை நீட்டி நின்ற சிறுவனின் தலையில் பயங்கரமாக இடித்தது. இதில் சிறுவன் நிலைக்குலைந்து போனான். உடனடியாக அவன் காருக்குள் சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளது.
இதனை அந்த பகுதியில் இருந்தவர் செல்போனில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 360-டிகிரி மிரட்டல் அனுபவம்! ரசிகர்களை திக்குமுக்காட வைத்த சர்ப்ரைஸ் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications