எங்கே தெற்கே காணோமே.. இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்கள் இவை தான்.. மேப்பை பாருங்கள்
பெங்களூர்: பாஜக ஆட்சி இருந்த ஒரே தென் மாநிலமான கர்நாடகாவும் இப்போது காங்கிரஸ் வசம் சென்று விட்டது. இதனால் தெற்கே பாஜகவின் காவி நிறம் மறைந்துவிட்டது. இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்கள் எவை எவை என்பதை இங்கு காணலாம்.
கர்நாடகாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானவை கர்நாடகத்தில் தொங்கு சட்ட சபைக்கு வாய்ப்பு உள்ளதாக கணித்து இருந்த நிலையில் அந்த கணிப்பை எல்லாம் பொய்யாக்கி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து இருக்கிறது காங்கிரஸ்.

113 இடங்கள் பெரும்பான்மைக்கு தேவைப்பட்ட நிலையில், 136 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்து இருக்கிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றி நாடு முழுவதும் மிகப்பெரும் கவனம் பெற்றுள்ளது. காரணம் பாஜக ஆட்சி இருந்த ஒரே தென் மாநிலம் கர்நாடகாதான். அங்கும் தற்போது பாஜக தோல்வி அடந்து இருந்த ஒரு தென்மாநிலத்தையும் பறிகொடுத்து இருக்கிறது. இதனால் தெற்கே பாஜகவின் காவி நிறம் மறைந்துவிட்டது.
பாஜகவின் தொடர் வெற்றிகளுக்கு வைக்கப்பட்டு இருக்கும் முற்றுப்புள்ளியாகவே இது பார்க்கப்படுகிறது. ஏனனில், 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தென் மாநிலங்களிலும் தனது பலத்தை நிறுவ பாஜக முயன்று வருகிறது. இந்நிலையில், தாங்கள் ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமான கர்நாடகாவிலும் பாஜக இன்று ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருக்கும் நிலையில், கர்நாடகாவில் ஆட்சியை இழந்தது பாஜகவிற்கு பெருத்த அடியாக பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் முக்த் பாரத்' (காங்கிரஸ் இல்லாத இந்தியா) என்ற கோஷத்தோடு பாஜக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வந்தது. பாஜகவின் இந்த கோஷத்திற்கு விழுந்த பெரிய அடியாகவே கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி காட்டுகிறது. ஏனெனில் தென் மாநிலத்தில் தனது பலத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கும் பாஜகவிற்கு ஆட்சி இருந்த ஒரு மாநிலமும் கைவிட்டு போயிருப்பது பெரும் பின்னடைவாக உள்ளது.

கர்நாடகாவில் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான், சத்தீஷ்கர், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கையில் 13.5 சதவிகித்தை காங்கிரஸ் ஆள்கிறது என்று கூட இதை சொல்லலாம். அதுபோக, பீகார் ஜார்க்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications