சற்று நேரத்தில் திருமணம்.. காதலனுடன் எஸ்கேப்பான பெண் டாக்டர்.. மண்டபத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்
பெங்களூர்: கர்நாடகாவில் தாலி காட்டும் நேரத்தில் மாப்பிள்ளையை விட்டுவிட்டு காதலனுடன் பெண் டாக்டர் எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மாப்பிள்ளை வீட்டார் போலீசில் புகார் செய்துள்ளனர்.

மண்டபம் முழுவதும் கண்ணை கவரும் தோரணங்கள்.. சீரியல் விளக்குகள்.. இன்னும் சற்று நேரம் தான் இருவீடுகளில் தனித்தனியே வாழ்ந்த நாம் கணவன் - மனைவியாக ஒரே வீட்டில் ஒரே அறையில் வாழப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தார் அந்த மாப்பிள்ளை.
ஆனால் மணப்பெண்ணோ சற்று பதற்றமாக காணப்பட்டார். காலையில் மண்டபத்தில் உறவினர்கள் கூட திருமணம் ஆகப்போகிறதே என்ற மகிழ்ச்சி மட்டும் மணப்பெண்ணின் முகத்தில் மாயமாகி இருந்தது. ஒருவித பதற்றத்தில் இருந்தார்.
திருமண நாளில் வரும் பயம், பதற்றம் தானே இது என வந்திருந்த குடும்பத்தினர், உறவினர்கள் சாதாரணமாக நினைத்து மணமக்களை வாழ்த்த தயாராக இருந்தனர். ஆனால் முதலில் மகிழ்ச்சியை மட்டுமே முகத்தில் மாயமாக்கி வைத்திருந்த மணப்பெண் அடுத்த சில நிமிடங்களில் மண்டபத்திலேயே இருந்து மாயமாகி காதலனுடன் எஸ்கேப் ஆனார். இது மணவிழாவுக்கு வந்திருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நிச்சயதார்த்தம்
இந்த சம்பவம் கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம் சிர்சியில் தான் நடந்துள்ளது. சிர்சி நகரில் வசித்து வரும் இளம்பெண் டாக்டராக இருக்கிறார். எம்பிபிஎஸ் படிப்பை முடித்துள்ளார். இவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் இன்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சிர்சியில் அமைந்து இருக்கும் திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது. இன்று காலையில் நிச்சயதார்த்தம் நடந்தது.
தாலி கட்டும் நேரத்தில் மாயம்
அதன்பிறகு திருமணத்துக்கு அனைவரும் தயாராகினர். தடபுடலாக விருந்துகள் சமைக்கப்பட்டு இருந்தது. மணப்பெண், மணமகன் குடும்பத்தினர், உறவினர்கள் மண்டபத்தில் காத்திருந்தனர். முகூர்த்த நேரம் நெருங்கியது. மணமகன் தயாராக இருந்தார். மணமகளை அழைக்க அவரது குடும்பத்தினர் அறைக்கு சென்றனர்.
அங்கு மணமகள் இல்லை. அவரை தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. அவர் திருமணம் பிடிக்காமல் எஸ்கேப் ஆகி இருந்தது தெரியவந்தது. இது மணமகன் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சற்று நேரத்தில் மனைவி வரப்போகிறாள் என்ற எண்ணத்தில் இருந்த மாப்பிள்ளைக்கு ஏமாற்றமே கிடைத்தது.
காதல் விவகாரம்
மணமகள் குடும்பத்தினரை, மணமகன் குடும்பத்தினர் திட்டி தீர்த்தனர். இறுதியில் இந்த விவகாரம் போலீஸ் நிலையம் சென்றது. சிர்சி நியூ மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் ஷிபாகானின் பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அப்போது தங்களின் மகள் காதலனுடன் ஓடி இருக்கலாம் என்று பெற்றோர் புகார் அளித்தனர். அதாவது எம்பிபிஎஸ் படிக்கும்போது அவருக்கும், இன்னொரு மாணவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்த காதல் விவகாரம் மணப்பெண்ணின் குடும்பத்துக்கு தெரியவந்ததுள்ளது. அவர்கள் அதனை ஏற்கவில்லை.
காதலன் கடத்தியதாக புகார்
அதோடு மகளுக்கு உடனடியாக திருமணம் நடத்த முடிவு செய்தனர். அவசரஅவசரமாக மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம், திருமணத்தை ஒன்றாக இன்று வைத்தனர். நிச்சயதார்த்தத்தின் போது திருமண மண்டபத்தில் இருந்த மகள் ஓடிப்போய் உள்ளதாக போலீசில் தெரிவித்தனர். அதோடு காதலன் தான் அவரை கடத்தி சென்று இருக்க வேண்டும் என்று புகாரளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
13 நாள் மனைவியுடன் கணவர் பேசாதது மனரீதியான கொடுமை அல்ல! கோவை இளைஞர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications