காதலில் கை தேர்ந்தவர்கள் வேலைக்கு தேவை! பெங்களூர் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! ஆடிப்போன நெட்டிசன்ஸ்
பெங்களூர்: பெங்களூரை சேர்ந்த டாப்மேட் என்ற நிறுவனம் வினோத ஆட்சேர்ப்பு விளம்பர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சீஃப் டேட்டிங் ஆஃபிசர் பணிக்கு ஆள் தேவை என்ற அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம், விண்ணப்பிப்பவர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. இந்த வினோத விளம்பரம் குறித்து நெட்டிசன்கள் சுவாரசியமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
வேலைக்கு ஆள் தேடும் நிறுவனங்கள் அது தொடர்பான அறிவிப்புகளை சமூக வலைத்தளங்கள் மற்றும் லிங்ட் இன் போன்ற தளங்களில் ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை வெளியிடுகின்றன. சில நிறுவனங்கள் வெளியிடும் அறிவிப்புகள் சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்க்கும் வகையில் இருக்கும். இப்படியெல்லாம் ஒரு வேலை இருக்கா என நினைகும் அளவுக்கு விசித்திரமான விளம்பரங்களை அவ்வப்போது பார்த்து இருக்கலாம்.

வேலையே செய்யக்கூடாது வந்து தூங்கிவிட்டு சென்றால் போதும் என்றெல்லாம் கூட விளம்பரங்களை பார்த்து இருக்கிறோம். அண்மையில் கூட பெங்களூருவைச் சேர்ந்த வேக்ஃபிட் (Wakefit) என்ற ஆன்லைன் நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் வலைத்தளங்களில் வைரலானது. மெத்தை தயாரிக்கும் இந்த நிறுவனம்,தங்கள் மெத்தை தூங்குவதற்கு எந்த அளவுக்கு வசதியானது என்பதை வாடிக்கையாளர்களுக்கு நிரூபித்து காட்டுவதற்கு ஊழியர்களை பணிக்கு எடுத்தது.
காதலில் கை தேர்ந்தவர்கள்
அதாவது அலுவலகத்திற்கு வந்து தூங்க வேண்டும். தினமும் 9 மணி நேரம் தூங்குவதற்கு இவர்களுக்கான சம்பளம் ரூ.1 லட்சமாம். அதேபோல, பின்லாந்து நாட்டில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றிலும் தூங்குவதற்கென்றே பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஹோட்டலில் உள்ள ஒவ்வொரு ரூமிலும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படுகின்ற மெத்தைகளில் சவுகரியமான வகையில் தூக்கம் வருகிறதா என்பதை பரிசோதிப்பது தான் இவர்களுடைய வேலை..
இதுபோன்ற விளம்பரங்கள் எல்லாம் ஆன்லைனில் பரவி அவ்வப்போது இப்படியெல்லாம் கூட வேலை இருக்கிறதா? என நம் மூக்கின் மேல் விரல் வைக்க வைக்கும். தற்போது இதற்கெல்லாம் ஒரு படி மேலே என நினைக்கும் வகையில் பெங்களூரை சேர்ந்த ஒரு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்த TopMate என்ற நிறுவனம் Chief dating offier என்ற பணிக்கு ஆட்கள் தேவை என எக்ஸ் தளத்தில் விளம்பரம் செய்துள்ளது.
என்னென்ன தகுதிகள்?:
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாகவும் குறைந்தது ஒரு காதல் தோல்வியையாவது, கடந்து வந்திருக்க வேண்டும் எனவும் 3 டேட்டிங் செயலிகளை பயன்படுத்த வேண்டும்.. காதல் டேட்டிங் இல் தற்போதைய டிரெண்டிங்கில் இருக்க வேண்டும் என தகுதிகளை பட்டியலிட்டுள்ளது.
இந்த விளம்பரம் நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன் ஒருவர் கூறுகையில், “பள்ளி காலத்தில் நான் கடைசி பெஞ்சில் உட்காருவேன். FLAMES போட்டு விளையாடி இருக்கிறேன். நான் இந்த பணிக்கு தகுதியான நபரா? என்று ஜாலியாக பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் கருத்து
மற்றொரு நெட்டிசன் கூறும் போது, “ரொம்பவே வேடிக்கையான வேலை. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறும் போது, ’80 - 90 களுக்கு இடையில் பிறந்தவர்கள் எல்லாம் இதற்கு செட் ஆக மாட்டார்கள் என நினைக்கிறேன். இது genZ தலைமுறைக்குதான் பொருத்தமாக இருக்கும்” என்று கூறுகிறார். இன்னொரு நெட்டிசன் கூறுகையில், இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி தற்போது இல்லை. ஆனால் இண்டெர்ன்ஷிப் டிரெயினிங் கொடுத்தால் நான் ரெடி என்ற ரீதியில் பதிவிட்டுள்ளார்.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications