"மேஜிக்" நம்பரை பிடித்த காங்கிரஸ்.. கர்நாடகாவில் கவிழும் தாமரை! டைம்ஸ் நவ் - ஈடிஜி கருத்துக்கணிப்பு
பெங்களூரு: கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்து முடிந்து இருக்கும் சூழலில், டைம்ஸ் நவ் - இடிஜி இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களில் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் பாஜக அரசின் ஆட்சிகாலம் மே மாதம் 24 ஆம் தேதியோடு நிறைவடைய உள்ள நிலையில், மே 10 ஆம் தேதியான இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து இருக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டன.

ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக இந்த தேர்தலில் தீவிரமாக பணியாற்றியது. காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்குடன் தேர்தல் களத்தில் கடினமாக உழைத்தன. தேர்தல் முன் பல்வேறு ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தன.
சில ஊடகங்கள் தொங்கு சட்டசபை அமையும் எனவும் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. இந்த நிலையில் இன்று 5 மணி நிலவரப்படி 65.69 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன.

அந்த வகையில் டைம்ஸ் நவ் மற்றும் இடிஜி இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பை பொறுத்தவரை கடலோர கர்நாடகாவில் 16 இடங்களில் பாஜகவும் 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மும்பை கர்நாடகாவில் 50 இடங்களில் பாஜக 23 இடங்களிலும், காங்கிரஸ் 27 இடங்களிலும் வெற்றிபெறும் என்று கணித்து உள்ளது.
ஐதராபாத் கர்நாடகாவில் பாஜக 10 இடங்களிலும், காங்கிரஸ் 29 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி ஒரு இடத்திலும் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. மத்திய கர்நாடகாவில் பாஜக 17 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக 224 தொகுதிகளை எடுத்துக்கொண்டால் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும் என்று டைம்ஸ் நவ் - இடிஜி கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி 85 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை இழக்கும் என அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்து உள்ளது.
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 23 இடங்களிலும், இதர வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றிபெறுவார்கள் என்று டைம்ஸ் - இடிஜி கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இதர நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளில் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என்றும் தெரிவித்த நிலையில் டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை கொடுத்து இருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications