அண்ணாமலையின் புதிய அவதாரம்.. சினிமாவில் அறிமுகம்! படத்தின் பெயர் “அரபி” -என்ன கதாபாத்திரம் தெரியுமா?
பெங்களூரு: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கன்னட திரைப்படமான அரபி என்ற படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்து முடித்துள்ளார்.
2 கைகளும் இல்லாமல் நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கன்னடத்தில் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.
அரபி என்ற பெயரில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் விஸ்வாசேவுக்கு பயிற்சியாளராக நடிக்க தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை இயக்குநர் அனுகியுள்ளார்.

அண்ணாமலையின் முதல் படம்
திரைப்படத்தின் கதையை கேட்டவுடன் அண்ணாமலைக்கு அது பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்த அண்ணாமலை ரூ.1 மட்டுமே ஊதியமாக பெற்றுக்கொண்டு நடித்து இருக்கிறார். அரபி திரைப்படத்தில் அண்ணாமலை வரும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அண்ணாமலையின் இந்த முதல் படத்தின் வெளியீட்டுக்காக பாஜகவினர் காத்துள்ளனர்.

பொறியாளர் அண்ணாமலை
கர்நாடகா மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணிபுரிந்தவர் அண்ணாமலை. கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே சொக்கம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் அண்ணாமலை. கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பை நிறைவு செய்து பொறியாளராக மாறிய அண்ணாமலை, லக்னோ ஐ.ஐ.எம். இல் பட்டம் படித்துவிட்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றிபெற்று காவல்துறைக்குள் நுழைந்தார்.

ஐ.பி.எஸ். அண்ணாமலை
கடந்த 2013 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கார்கலா துணை பிரிவு உதவி காவல் கண்காணிப்பாளராக போலீஸ் பணியை தொடங்கிய அண்ணாமலை, 2015 ஆம் ஆண்டில் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். 2018 ஆம் ஆண்டில் பெங்களூரு துணை ஆணையராக பதவி உயர்வு பெற்ற அண்ணாமலை அதிரடியான நடவடிக்கைகளால் கர்நாடகாவில் புகழ்பெற்றார்.

விவசாயி அண்ணாமலை
இதனிடையே 2019 ஆம் ஆண்டு காவல்துறை பணியை ராஜினாமா செய்த அண்ணாமலை சொந்த கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்யப்போவதாக அறிவித்தார். தொடர்ந்து இயற்கை விவசாயம் தொடர்பாக பேசியும், எழுதியும் வந்த அவர், ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ரஜினி தொடங்கப்போகும் கட்சி அல்லது பாஜகவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகின.

அரசியல்வாதி அண்ணாமலை
தொடக்கத்தில் அதற்கு அண்ணாமலை மறுப்பு தெரிவித்தாலும், பின்னர் அவரது கருத்துக்களின் மூலம் அவர் ஆர்.எஸ்.எஸ். கொள்கையின் அபிமானி என்பது உறுதியானது. இதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு முரளிதர் ராவ், சி.டி.ரவி, எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் அண்ணாமலை. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை 24,816 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தார்.

தமிழ்நாடு பாஜக தலைவர்
இதன் பின்னர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 2021 ஜூலை மாதம் தமிழ்நாடு பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டார் அண்ணாமலை. தொடர்ந்து அரசின் நடவடிக்கைகளை விமர்சித்தும், மத்திய அரசின் செயல்பாடுகளை பிரபலப்படுத்தியும் பேசி வரும் அண்ணாமலை, தனது சர்ச்சைக்குறிய பேச்சுக்களின் மூலமாக தமிழ்நாடு மக்களின் பரிட்சையமான முகமாகவே மாறிவிட்டார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"எனது மகள் திவ்யா பற்றி பரவி வரும் வதந்திகளில் எதுவும் உண்மையல்ல”.. நடிகர் சத்யராஜ் விளக்கம்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?











Click it and Unblock the Notifications