கர்நாடகத்தில் அடுத்த திருப்பம்.. 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2-வது முறை கெடு விதிப்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Karnataka Floor Test : இரவு முழுவதும் பேரவையில் தூங்கிய பாஜக உறுப்பினர்கள்

    பெங்களூரு: கர்நாடகத்தில் ஆளும் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க ஆளுநர் விதித்த கெடு மதியம் 1.30 மணியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அம்மாநில ஆளுநர் குமாரசாமிக்கு கெடு விதித்துள்ளார்.

    இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க கர்நாடக மாநில ஆளுநர், முதல்வர் குமாரசாமிக்கு உத்தரவிட்டுள்ளார்.

    Today floor test in Karnataka assembley.. BJP MLAs sleeps in Assembly in Karnataka

    முன்னதாக கர்நாடக சட்டசபையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி கர்நாடக முதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க மாநில ஆளுநர் கெடு விதித்திருந்தார். இந்நிலையில் பாஜக எம்எல்ஏ-க்கள் அம்மாநில சட்டமன்றத்திலேயே படுத்துறங்கி நேற்று இரவு பொழுதை கழித்தனர்.

    பெரும் பரபரப்பிற்கிடையே நேற்று கூடிய கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. ஆனால் ஆளும் தரப்பு மற்றும் பாஜக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    கடும் அமளி காரணமாக நேற்று 3 முறை பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. கூச்சல், குழப்பம் காரணமாக நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாத நிலையில், கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை அம்மாநில பாஜக உறுப்பினர்கள், நேரில் சென்று சந்தித்து நிலைமையை விளக்கினர்.

    இதனையடுத்து கர்நாடக பேரவை சபாநாயகருக்கு ஆளுநர் இன்றே அதாவது நேற்றே , நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க உத்தரவிட்டார். ஆனால் கடும் அமளி காரணமாக துணை சபாநாயகர் பேரவையை இன்று காலை 11 மணி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனால் பாஜக-வினர் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்நிலையில் முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் எழுதிய ஆளுநர் இன்று மதியம் 1.30 மணிக்குள் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என கெடு விதித்திருந்தார். ஆளுநரின் கெடுவை அடுத்து எடியூரப்பா தலைமையில் பாஜக உறுப்பினர்கள் அனைவரும், இரவு முழுவதும் சட்டப்பேரவையிலேயே தங்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்

    ஆனால் ஆளுநர் அளித்த கெடு நேரம் மதியம் 1.30 மணியுடன் முடிவடைந்து விட்டது. சட்டசபையில் இன்றைய கூட்டத்தின் போது சபை விவகாரங்களில் ஆளுநர் தலையிட்டதற்கு குமாரசாமி கடும் அதிருப்தி தெரிவித்தார் சட்டசபையில் தொடர்ந்து பேசிய கர்நாடக அமைச்சர்கள் பலரும், ஆளுநர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினர்.

    இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்குள் கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க, முதல்வர் குமாரசாமிக்கு கர்நாடக மாநில ஆளுநர் இரண்டாவது முறையாக கெடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+