பெங்களூர் சாலையில் யார் அது? அட தீபிகா படுகோன்.. பட்டென சுற்றிய ரசிகர்கள்.. என்னாச்சு பாருங்க!
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் எந்தளவுக்குப் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே பெங்களூர் டிராபிக் பாலிவுட் பிரபலத்தையும் விட்டு வைக்கவில்லை. டிராபிக்கில் கார் சிக்கியதால் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பெங்களூர் சாலைகளில் நடந்து சென்ற வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூர் இந்திய ஐடி நிறுவனங்களின் தலைநகராக அறியப்படுகிறது. ஏகப்பட்ட ஐடி நிறுவனங்கள் பெங்களூரில் தான் இருக்கிறது.

நெரிசல்: அதேபோல பெங்களூர் என்றாலே பலருக்கும் அங்கு நிலவும் போக்குவரத்து நெரிசல் தான் நினைவுக்கு வரும். அதிலும் வீக் எண்ட் நாட்களில் அருகே உள்ள இடத்திற்குச் செல்லவே நீண்ட நேரம் காத்திருக்கும் சூழலே இருக்கும். இதன் காரணமாகப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பெங்களூர் டிராபிக் இப்போது பாலிவுட் பிரபலத்தையும் விட்டு வைக்கவில்லை.
அதாவது பிரபல இந்தி பாடகரான தில்ஜித் தோசாஞ்சின் இசைக் கச்சேரி கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் நடைபெற்றது. இதில் வழக்கம் போல பல நூறு பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டனர். இந்த இசைக் கச்சேரியில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பங்கேற்றார். பாடகர் தில்ஜித் உடன் அவரும் மேடை ஏறவே, பெங்களூர் ரசிகர்களுக்கு இது இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டானது.
தீபிகா படுகோன்: இதற்கிடையே தீபிகா படுகோன் இசைக் கச்சேரியில் பங்கேற்ற வீடியோ மட்டுமில்லை.. அவர் எப்படி இசைக் கச்சேரி நடக்கும் இடத்திற்கு வந்தார் என்பது குறித்த வீடியோ கூட இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பெங்களூர் டிராபிக் தீபிகா படுகோனையும் படுத்திவிட்டது. இதனால் வேறு வழியில்லாமல் அவர் பெங்களூர் சாலைகளில் நடந்தே கச்சேரி நடக்கும் இடத்திற்குச் சென்று இருக்கிறார்.
அதாவது பெங்களூர் சர்வதேச கண்காட்சி மையத்தில் (BIEC) இந்த இசைக் கச்சேரி நடந்தது. இதில் கலந்து கொள்ள தீபிகா படுகோன் காரில் சென்றுள்ளார். இருப்பினும், பெங்களூர் டிராபிக்கில் அவரது கார் சிக்கிக் கொண்டது. அப்போது இருந்த டிராபிக்கை பார்த்தால் கார் நகர்வதாகத் தெரியவில்லை. இதையடுத்து அவர் நடந்தே இசைக் கச்சேரி நடக்கும் இடத்திற்குச் செல்ல முடிவு செய்துள்ளார்.
சாலையில் தீபிகா: காரில் இருந்து இறங்கிய அவர், மடமடவென சாலையில் நடக்க ஆரம்பித்துவிட்டார். ரசிகர்களுடன் பெங்களூர் சாலைகளில் அவர் ஜாலியாக நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. வைரல் பயானி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
அதில் தீபிகா படுகோன் ரசிகர்களுடன் நடந்து செல்வதும் ஜாலியாக உற்சாகப்படுத்துவதும் தெளிவாகத் தெரிகிறது. இசைக் கச்சேரி காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்ததால், அவர் நடந்தே செல்ல முடிவெடுத்துள்ளார்.
முதல்முறை: கடந்த செப் மாதம் தான் தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் தம்பதிக்கு மகள் பிறந்தது. அதன் பிறகு தீபிகா படுகோன் கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும். பாலிவுட், ஹாலிவுட் வரை கலக்கும் தீபிகா படுகோனின் சொந்த ஊர் பெங்களூர் என்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications