தந்தை புகைத்து போட்ட பீடி துண்டால் பறி போன 10 மாத ஆண் குழந்தை உயிர்! பெற்றோர்களே கவனம்
பெங்களூர்: சிறு குழந்தைகளை வீட்டில் வைத்து இருக்கும் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளை கண்காணிப்பதோடு, பெற்றோரின் அஜாக்கிரதையும் குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது உதாரணமாக மங்களூரில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. தந்தையின் அஜாக்கிரதையால் ஒரு வயது கூட ஆகாத குழந்தையின் உயிர் பறிபோயுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூர் டவுன் அடையாறு அருகே பீகாரை சேர்ந்த ஒரு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு அனீஷ் குமார் என்ற 10 மாத மகன் இருந்தான். சிறுவனின் தந்தை திருமண விழா அலங்கார பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பீடி புகைக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

பீடித்துண்டு சிக்கி மூச்சுத்திணறல்
பீடி புகைப்பதற்கு அடிமையாய் இருந்துள்ள இவர், பீடியை புகைத்துவிட்டு மீதம் உள்ள துண்டு பீடியை வீட்டில் இருக்கும் இடத்திலேயே போட்டுள்ளார். இதனையே இவர் வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்றும் அவர் பீடி புகைத்துவிட்டு மீது துண்டு பீடியை வீட்டில் போட்டுள்ளார். இதை வீட்டில் இருந்த 10 மாத குழந்தை அனீஷ் குமார் எடுத்து வாயில் போட்டு விழுங்கியுள்ளது.
இதில் குழந்தையின் தொண்டையில் பீடித்துண்டு சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் - தந்தை உடனடியாக குழந்தையை மீட்டு மங்களூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கணவர் மீது மனைவி புகார்
குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுத தாய், இந்த சம்பவம் குறித்து மங்களூர் புறநகர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறுகையில், என் கணவரிடம் அடிக்கடி நான் சொல்லியிருக்கிறேன்.. வீட்டில் பச்சை குழந்தை இருக்கிறது. இப்போது தவழ்ந்து நடைபழகும் என்பதால், கீழே கிடப்பதையும் எடுத்து வாயில் போடுகிறது.
நீங்கள் பீடித் துண்டை இப்படி போட்டால் குழந்தை வாயில் எடுத்து வைத்து விடுகிறான் என்று சொல்லியிருக்கிறேன். ஏற்கனவே ஒருமுறை இப்படித்தான் கீழே கிடந்த பீடித்துண்டை எடுத்து குழந்தை வாயில் போட்டது. நான் உடனே கவனித்ததால் தடுத்துவிட்டேன். இப்போது என் குழந்தை உயிரிழந்ததற்கு கணவரின் அலட்சியப் போக்கே காரணம் என்று கூறியிருந்தார்.
போலீசார் விசாரணை
மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை செய்த அலட்சிய செயலால் 10 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. புகைப் பிடித்தால் உடல்நலனுக்கு கேடு என்று அனைவருக்கும் தெரிந்ததே.. ஆனால் மங்களூரில் மகனின் உயிருக்கே ஆபத்தாய் முடிந்துவிட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications