பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல் முறையாக.. 18 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் "சின்னம்மா"வைச் சந்தித்தார் தினகரன்!

20 தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திப்பதுதான் சரி என சசிகலா கூறினார் என்று பெங்களூரில் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    18 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் 'சின்னம்மா'வைச் சந்தித்தார் தினகரன்!-வீடியோ

    பெங்களூர்: 20 தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திப்பதுதான் சரி என சசிகலா கூறினார் என்று பெங்களூரில் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.

    பெங்களூர் பரப்பன அக்கிரஹார சிறையில் உள்ள சசிகலாவை அவரது உறவினர் டிடிவி தினகரன் இன்று நேரில் சந்தித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக முதல்முறையாக நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் 18 பேரும் அவருடன் பெங்களூர் சென்றனர்.

    TTV Dinakaran gives press conference after met Sasikala in Bangalore

    இந்த சந்திப்பிற்கு பின் பெங்களூரில் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.

    அதில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக நாங்கள் பேசினோம். மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று நாங்கள் எடுத்த முடிவு சரியானது என்று சசிகலா கூறினார்.

    அதிமுகவினரால் 'சர்கார்' நிறுத்தம்... தாராபுரத்தில் ரசிகர்கள் டிக்கெட் காசை கேட்டு.. வெய்ட்டிங்!! அதிமுகவினரால் 'சர்கார்' நிறுத்தம்... தாராபுரத்தில் ரசிகர்கள் டிக்கெட் காசை கேட்டு.. வெய்ட்டிங்!!

    இடைத்தேர்தலை சந்திப்பது சரி தான், தைரியமாக தேர்தலில் போட்டியிடுங்கள் என சசிகலா கூறினார். 20 தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திப்பது நல்ல முடிவு என சசிகலா கூறினார்.

    சர்கார் விவகாரத்தில் ஆளும் கட்சியினரின் அணுகுமுறை தவறானது. இதில் எந்த கட்சியும் சரியான அணுகுமுறையாக கடைபிடிக்கவில்லை. முக்கியமாக அரசு இதில் அவசரப்படுகிறது.

    அதேசமயம் சர்கார் படத்தை நடுநிலையுடன் எடுக்கவில்லை. இலவச டிவியை எரித்திருந்தால் ஏற்றுக்கொள்வோம். ஆனால் அப்படி எல்லாம் செய்யாமல், திமுக பற்றி பேசாமல் இருந்துள்ளனர்.

    இவர்கள் அரசியலுக்கு வந்தால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மறைந்த தலைவர்களின் திட்டங்களை விமர்சிப்பது பெரிய அநாகரீகம்.

    மக்களை முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பும் நோக்கில் ஆளும் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு மூலம் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சோதனை நடந்தது அப்போதெல்லாம் போராடாத ஆளுங்கட்சியினர் சர்காருக்கு எதிராக போராடுகிறார்கள், என்று கூறியுள்ளார்.

    English summary
    TTV Dinakaran gives press conference after met Sasikala in Bangalore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X