பாஜகவுக்கு பெரியஅடி.. கர்நாடகாவில் காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுக்கும் ‛தாமரை’? டிவி5 கன்னடா கணிப்பு
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுக்கலாம் என டிவி5 கன்னடா சேனல் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி தனிமெஜாரிட்டி பெறும் எனவும், முந்தைய தேர்தலை ஒப்பிடும்போது பாஜக 30க்கும் அதிகமான தொகுதிகளை இழக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின் முழுவிபரம் வருமாறு:
கர்நாடகா சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிப்பதில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே தேர்தலுக்கு முந்தைய பல்வேற கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் சில கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கும், சில கருத்து கணிப்புகள் பாஜகவுக்கும் சாதகமாக உள்ளன. இன்னும் சில கருத்து கணிப்புகளோ தொங்கு சட்டசபை உருவாகும் என தெரிவித்துள்ளன. இந்நிலையில் தான் டிவி5 கன்னடா சேனல் சார்பில் கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
டிவி5 கருத்து கணிப்பு: இந்த டிவி 5 கன்னடா சேனலின் கருத்து கணிப்பின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த கருத்து கணிப்பு என்பது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது. மாறாக பாஜக, ஜேடிஎஸ் கட்சிகளுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் இந்த கருத்து கணிப்பு அமைந்துள்ளது. இந்த கருத்து கணிப்பின் படி கர்நாடகாவின் பழைய மைசூர் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி 25 முதல் 27 இடங்களில் வெற்றி பெறும். ஜேடிஎஸ் 23 முதல் 25 இடங்களிலும், பாஜக 4 முதல் 6 தொகுதிகளிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் நிலவரம்: ஹைதரபாத்-கர்நாடகா மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி 28 முதல் 30 தொகுதிகளிலும், பாஜக 8 முதல் 11 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் 2 இடங்களிலும், மற்றவர்கள் 2 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர், பெங்களூர் புறநகர் பகுதகளை பொறுத்தமட்டில் 22 முதல் 24 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 9 முதல் 11 தொகுதிகளில் பாஜகவும், 1 முதல் 4 தொகுதிகளில் ஜேடிஎஸ் கட்சியும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது., கடலோர கர்நாடகா மாவட்டங்களில் பாஜக 14 முதல் 16 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 8 முதல் 10 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் 1 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய கர்நாடகா: மேலும் மத்திய கர்நாடகா மாவட்டங்களை பொறுத்தமட்டில் பாஜக 14 முதல் 16 தொகுதிகளில் வெல்லும் எனவும், காங்கிரஸ் கட்சி 8 முதல் 10 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை கர்நாடகா மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி 28 முதல் 30 தொகுதிகள் வரை வெல்லும் எனவும், பாஜக 17 முதல் 19 தொகுதிகளல் வெற்றி பெறும் எனவும், ஜேடிஎஸ் ஒரு தொகதியை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரசுக்கு மெஜாரிட்டி: மொத்தமாக பார்த்தால் இந்த வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 125 முதல் 130 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 224 சட்டசபை தொகுதி உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் இந்த கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் 130 தொகுதிகள் வரை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜக பெரிய சறுக்கல்: மாறாக பாஜக 62 முதல் 68 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கர்நாடகாவில்
காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை பறிகொடுக்கும் என இந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. அதோடு கடந்த 2018 சட்டசபை தேர்தலில் பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது 68 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என கூறியிருப்பது அக்கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஜேடிஎஸ் நிலவரம்: மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காமல் இருந்தால் கிங்மேக்கராக ஜேடிஎஸ் மாறும் நிலையில் அந்த கட்சி 24 முதல் 29 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்றவர்கள் 2 தொகுதிகளில் ஜெயிப்பார்கள் என டிவி5 கன்னடா கருத்து கணிப்பு கூறியுள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications