இதெல்லாம் ஒரு குத்தமா? டாக்ஸியில் ஏறிய பெண்ணை சரமாரியாக தாக்கிய ஊபர் ஓட்டுநர்.. காரணத்தை பாருங்க
பெங்களூர்: கர்நாடகாவில் தவறான ஊபர் டாக்ஸியில் ஏறியதற்காக பெண் மற்றும் அவரது மகன் இருவரும் சரமாரியாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரின் போகனஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அஜய் அகர்வால் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவரது மனைவி இவர்களது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஊபர் டாக்ஸியை புக் செய்திருக்கிறார். புக் செய்ததை போலவே கார் வந்திருக்கிறது. தாயும் மகனும் காருக்குள் ஏறியுள்ளனர். அப்போதுதான் இது தாங்கள் புக் செய்த வண்டி இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

எனவே உடனடியாக காரை விட்டு இறங்கியுள்ளனர். ஆனால் இதற்கு முன்னதாகவே காரின் டிரைவர் இந்த சம்பவத்தால் எரிச்சலடைந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அகர்வாலின் மனைவியை கண்டபடி திட்டியுள்ளார். அவரும் பதிலுக்கு எதையோ பேசியுள்ளார். எனவே கடுப்பான டாக்ஸி டிரைவர் அப்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். இதை தடுக்க வந்த அவருடைய குழந்தைக்கும் அடி விழுந்துள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் டிரைவரை விலக்கிவிட்டு பெண்ணையும் அவரது மகனையும் காப்பாற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவின் அடிப்படையில் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகர்வால் போலீசில் புகார் அளித்துள்ளார். மட்டுமல்லாது இது குறித்து X சோஷியல் மீடியாவில் (டிவிட்டர்) இந்த சம்பவங்களை குறிப்பிட்டு ஊபரை டேக் செய்திருக்கிறார். இதற்கு பதிலளித்துள்ள ஊபர், "தங்களது புகார் குறித்து கவனத்தில் கொண்டிருக்கிறோம். இந்த புகார் தொடர்பான முழு விவரம் கிடைத்தவுடன் விசாரணையை தொடங்குவோம்" என்று கூறியுள்ளது.
இதற்கிடையில் அகர்வால் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் டாக்ஸி டிரைவரை கைது செய்துள்ளனர். ஆனால் டிரைவர் தரப்பில் புகார் மறுக்கப்பட்டுள்ளது. புக் செய்யப்பட்ட டாக்ஸி 100 மீட்டர் தொலைவில் இருந்ததால் தன்னை திட்டிக்கொண்டே காரில் ஏறியதாகவும், பின்னர் கார் கதவை வேண்டும் என்றே வேகமாக சாத்தியதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பான வாக்குவாதத்தில் தன்னை மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டியதாகவும் எனவேதான் பெண்ணை தாக்கியதாகவும் டிரைவர் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே ஊபர் டாக்ஸி டிரைவர்கள் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் லிங்க்ட் இன் வெப்சைட்டில் இதேபோல ஊபர் டிரைவர் குறித்து இளம்பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications