மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்!
பெங்களூர்: உடல் நலக்குறைவால் மரணமடைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
பெங்களூர் தெற்கு தொகுதி எம்.பி.யும், மத்திய அமைச்சருமாக பதவி வகித்து வந்தவருமான, பாஜக மூத்த தலைவர், அனந்தகுமார் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நவம்பர் 12ம் தேதி அதிகாலை மரணமடைந்தார்.

10 நாட்களுக்கும் மேலாக பெங்களூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனந்தகுமார், மறைவிற்கு, குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை, நேரில் சென்று, அனந்தகுமார் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து இன்று காலை, பெங்களூரிலுள்ள கர்நாடக மாநில பாஜக அலுவலகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக அனந்தகுமார் உடல் வைக்கப்பட்டது.
பின்னர், பசவனகுடியிலுள்ள நேஷனல் மருத்துவ கல்லூரி மைதானத்தில் அவரது உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சாமராஜ்பேட்டை மயானத்தில் அவரது உடல், பிராமணர்கள் வழக்கப்படி, வேத மந்திரங்கள் முழங்க, தகனம் செய்யப்பட்டது.
இறுதிச்சடங்கில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு அனந்தகுமாருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
-
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications