கர்நாடகாவில் ஆளில்லா விமானம் பயிற்சியின் போது விபத்து.. விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியது
பெங்களூர்: இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு சொந்தமான ஆளில்லா விமானம் ஒன்று கர்நாடகாவில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமான விபத்துக்குள்ளானதும் அந்த இடத்தில் சத்தம் கேட்டதோடு தீ பிடித்தது எரிந்து புகை வெளியேறியது.
இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுத தளவாடங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட நவீன ஆயுத உற்பத்தியில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் மேற்கொண்டு வருகிறது. டி.ஆர்.டி.ஓ என்று அழைக்கப்படும் இந்த அமைப்பானது ஏவுகணை சோதனை மற்றும் விமானங்கள் சோதனையை அவ்வப்போது நடத்துவது வழக்கம்.

அந்த வையில், இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு சொந்தமான ஒரு ஆளில்லா விமானம் (Tapas 07A) இன்று வழக்கமான சோதனைக்கு சென்றது. அப்போது எதிர்பாரத விதமாக கர்நாடகா மாநில சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் விவசாய நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமான விபத்துக்குள்ளானதும் அந்த இடத்தில் சத்தம் கேட்டதோடு தீ பிடித்தது எரிந்து புகை வெளியேறியது.

இதை கவனித்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் கிராம மக்கள் அதிக அளவில் கூடியதால் போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டிஆர்.டி.ஓ அதிகாரிகளும் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர். ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications