ஆண்டுக்கு 72 லட்சம் .. அமெரிக்காவில் பிரெஷ்ஷருக்கான சாதாரண சம்பளம்.. விமர்சிக்கும் ஐடி என்ஜினியர்கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த ரிதுபர்ணா என்ற மாணவி, 'நீட்' தேர்வில் தோல்வி அடைந்தும் மனம் தளராமல் என்ஜினியரிங் முடித்தார். இவருக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் ஆண்டுக்கு ரூ.72 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் விமான என்ஜின் உற்பத்தி நிறுவனத்தில் வேலைக்கு சேர போகிறார். இதை ஊடகங்கள் கொண்டாடி வரும் நிலையில், அமெரிக்காவில் உள்ள ஐடி என்ஜினியர்களோ, அமெரிக்காவில் இது பிரெஷ்ஷருக்கான சாதாரண சம்பளம் தான் என்று விமர்சிக்கிறார்கள்.

கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த 20 வயதாகும் மாணவி ரிதுபர்ணா எம்.பி.பி.எஸ். படிக்க விரும்பி உள்ளார். அதற்காக நீட் தேர்வு எழுதியிருக்கிறார். அதில் தேர்ச்சி பெற முடியாமல் போயிருக்கிறது. அதன்பிறகு சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு முயன்றுள்ளார். அதிலும் வெற்றி கிடைக்கவில்லையாம். அதன் பிறகு அவரது பெற்றோரின் விருப்பப்படி என்ஜினியிரிங் படித்துள்ளார்.

us job salary karanata Mangalore s Rituparna get 72 lacks in us It s just a normal salary for a fresher

ரோபாட்டிக்ஸ்

ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ஜினீயரிங் படிப்பை படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவி ரிதுபர்ணாவிற்கு மாணவி இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பிரபலமான ரோல்ஸ் ராயிஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் கிளை நிறுவனத்தில் பணியாற்ற உள்ளார்.


விமான என்ஜின்களின் உற்பத்திப் பிரிவு

ரோல்ஸ் ராயிசின் விமான என்ஜின்களின் உற்பத்திப் பிரிவில் ரிதுபர்ணா வேலையில் சேருகிறார். அவருக்கு ஆண்டுக்கு ரூ.72 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளதாம். மங்களூர் அடியாரில் உள்ள சக்யாத்ரி என்ஜினீயரிங் கல்லூரியில் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் படித்த ரிதுபர்ணா, தோழியுடன் சேர்ந்து, பாக்கு மரங்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் மற்றும் அறுவடை செய்யும் பிரிக்கக்கூடிய ரோபோவை உருவாக்கி உள்ளார்.

சம்பளம் எவ்வளவு

சிங்கப்பூர், ஜப்பான், சீனா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த போட்டியாளர்கள் இடையே கோவாவில் நடந்த சர்வதேச மாநாட்டில் தனது ரோபோவை காட்சிப்படுத்தி, வெள்ளி மற்றும் தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளாராம். அவருக்கு தொடக்கத்தில் ஆண்டுக்கு ரூ.39.58 லட்சமாக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதாம்.

72 லட்சம் சம்பளம்

ஆனால் ரிதுபர்ணா செய்த தொழில் பயிற்சியை பார்த்து வேலைக்காக அங்கீகரித்த பிறகு ஆண்டு சம்பளம் ரூ.72 லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டதாம். கல்லூரியின் 7-வது செமஸ்டர் தேர்வு முடிந்ததும் அவர் வேலைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அதேநேரம் ஆண்டுக்கு ரூ.72 லட்சம் சம்பளம் என்பது அமெரிக்காவில் இது பிரெஷ்ஷருக்கான சாதாரண சம்பளம் தான் என ஐடி என்ஜினியர்கள் விமர்சிக்கிறார்கள்.

நெட்டிசன்கள் விமர்சனம்

இதே சம்பளம் இந்தியாவில் வாங்கியிருந்தால் உயர்ந்த சம்பளம் என்றும், அமெரிக்காவை பொறுத்தவரை நார்மலான சம்பளம் தான் என்றும் கூறுகிறார்கள். இதைவிட குறைவான சம்பளம் என்றால், உள்ளூர் அமெரிக்கர்களை தான் பணியில் அமர்த்த முடியும் என்றும், அமெரிக்காவிற்கு வெளிநாட்டினை வேலைக்கு எடுக்க வேண்டும் என்றால்,இந்த அளவிற்காவது சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கூறுகிறார்கள். இது தெரியாமல் ஊடகங்கள் கொண்டாடுவதாகவும் நெட்டிசன்கள் விமர்சிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+