மீண்டும் போர்க் கொடி தூக்கும் வாட்டாள் நாகராஜ்.. ரஜினியின் 2.0 படத்துக்கு எதிர்ப்பு
Recommended Video

பெங்களூரு: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தை திரையிடும் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் வரும் 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது. காவிரி குறித்து ரஜினி பேசியதால் எப்போது ரஜினி படம் கர்நாடகத்தில் திரையிடப்பட்டாலும் அதற்கு எதிராக வாட்டாள் நாகராஜ் அமைப்பினர் போராட்டம் நடத்துவது வழக்கம்.

பிறமொழி திரைப்படம்
இந்த நிலையில் பெங்களூருவில் பிற மொழி படங்கள் அதிகளவில் வெளியாவதால் கன்னட திரையுலகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கன்னட அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 2.0 திரையிடப்படுகிறது.

ஆர்ப்பாட்டம்
பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பிற மொழி படங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தக் கோரி கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூரு சிவானந்த சர்க்கிளில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அலுவலக கட்டடம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னட படம்
அப்போது வாட்டாள் நாகராஜ் மேளம் அடித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். பின்னர் வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னட படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத நிலை உள்ளது. கன்னட திரையுலகை பாதுகாக்க வேண்டுமென்றால், அனைத்து திரையரங்குகளிலும் கன்னட படத்தை திரையிட வேண்டும்.

2.0 திரைப்படம்
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் வருகிற 29-ஆம் தேதி வெளிவருகிறது. இதற்காக கர்நாடகத்தில் அனைத்து திரையரங்குகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிடும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 2.0 படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பாக கன்னட கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவோம் என்றார் வாட்டாள் நாகராஜ்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications