சித்தராமையாவிடம் திருமாவளவன் வைத்த முக்கிய டிமாண்ட்! கர்நாடகாவில் 'சீறப்போகும்' விடுதலை சிறுத்தைகள்!
கர்நாடக தேர்தல் களத்தில் கால் பதிக்க தயாராகும் விசிக.
பெங்களூர்: கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவை நேரில் சந்தித்து பேசியிருப்பதுடன் சில முக்கிய டிமாண்ட்களையும் வைத்திருக்கிறார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இரண்டு அல்லது ஒரு தொகுதியை வாங்கிவிட வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கணக்காக உள்ளது.
இது தொடர்பாக நாம் ஒன் இந்தியா தமிழில் ஓரிரு மாதங்களுக்கு முன்பு தனிச்செய்தி வெளியிட்டிருந்தோம். நாம் வெளியிட்ட செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் நடந்து வருகின்றன.

கர்நாடக தேர்தல்
224 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கர்நாடகாவில், மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இதனிடையே காங்கிரஸ் தரப்பிலும் பாஜகவை எதிர்கொள்வதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சசிகாந்த் செந்தில் தலைமையிலான குழு இதற்காக ஒர்க் அவுட் செய்து வருகிறது. அதேபோல் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் டீமும் டி.கே.சிவக்குமாருடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தை
தேர்தலுக்கு நாள் நெருங்கி வருவதால் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. அந்த வகையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் களமிறங்கும் ஐடியாவில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு காங்கிரஸ் கூட்டணியில் இரண்டு அல்லது ஒரு தொகுதியையாவது வாங்கிவிட வேண்டும் என விரும்புகிறார் திருமாவளவன். 2 நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவை நேரில் சந்தித்து பேசிய போது தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி ஒன்றின் பெயரை குறிப்பிட்டு அதில் உள்ள தமிழர்கள் வாக்கு வங்கி பற்றி எடுத்துக் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் அமைப்பு
கர்நாடகாவில் விசிகவின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள திருமாவளவன் அவ்வப்போது பெங்களூருக்கு சென்று தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். இதேபோல் தனது பிரதிநிதிகளாக கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளையும் அங்கு அனுப்பி வருகிறார். தினேஷ்குண்டுராவ், டிகே சிவக்குமார் ஆகியோருடன் சித்த ராமையா கலந்து ஆலோசனை செய்த பிறகு விசிக சீட் விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

எகிறும் எதிர்பார்ப்பு
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் திட்டத்தில் இருப்பதால் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications