இவரும் பாஜகவா? கர்நாடகாவில் தாமரைக்கு ஓட்டு கேட்கும் விஜய் பட வில்லன்! என்ன பேசி இருக்காரு கேளுங்க..
பெங்களூரு: கர்நாடகாவில் வரும் 10 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், விஜய் நடித்த ஆதி உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் வில்லனாக நடித்த சாய்குமார் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 3 மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் சாய்குமார். ஆந்திராவில் பிறந்த இவர் சென்னைக்கு குடிபெயர்ந்து, குழந்தை நட்சத்திரமாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பின்னனி குரல் கலைஞராகவும் பணியாற்றி முன்னணி நடிகராக உருவெடுத்தார். 1996 ஆம் ஆண்டு போலீஸ் ஸ்டோரி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் இவர் புகழ்பெற்றார்.

மூன்று முறை பிலிம்பேர் விருதுகளையும், ஆந்திர அரசு வழங்கும் நந்தி விருதையும் இவர் வென்று இருக்கிறார். 1991 ஆம் ஆண்டு வெளியான தையல்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், விஜய் நடிப்பில் வெளியான ஆதி திரைப்படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதேபோல், இரும்புக் கோட்டையில் முரட்டு சிங்கம், அன்பறிவு, அண்மையில் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான வாத்தி உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்து இருந்தார்.
தெலுங்கு திரைப்படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு இவர் நன்கு பரிட்சயமான முகம். அந்த அளவுக்கு ஏராளமான தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்து உள்ளார். இந்த நிலையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில், பாஜகவின் கட்சித் துண்டை அணிந்துகொண்டு நிற்கும் அவர் கர்நாடகாவில் நடைபெற இருக்கும் சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.

"ஜெய் பாரத். ஜெய் கர்நாடகா. மே 10 ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். இரட்டை இஞ்சின் ஆட்சி இருந்தால் மாநிலம் வளர்ச்சி பெறும். வந்தே மாதரம். வந்தே பாரதம். ஜெய் ஸ்ரீராம். மோடி ஒரு நாயகர். மோடி ஒரு சேவகர். எனவே பாஜகவுக்கு வாக்களியுங்கள். கே என்றால் கர்நாடகா. கே என்றால் கமலா. ஜெய் பஜ்ரங்கி. ஜெய் ஹிந்த்." என்று அவர் பேசி இருக்கிறார்.
நடிகர் சாய்குமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே பாஜகவில் சேர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் போட்டியிட விரும்புகிறேன் என்று அறிவித்தார் நடிகர் சாய்குமார். தேர்தலில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்று அறிவித்தார்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கர்நாடகாவின் பேகேபல்லி தொகுதியில் போட்டியிட்ட சார்குமார் அதில் 4 வது இடத்தையே பிடித்து படுதோல்வியடைந்தார். அதில் அவருக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை. இதுவரை கர்நாடகா மாநிலத்தில் பாஜக சார்பில் போட்டியிட்டு மூன்று முறை சாய்குமார் தோல்வியடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் ஓயும் நிலையில், இந்த தேர்தலில் நடிகர் கிச்சா சுதீப் தொடங்கி பல்வேறு திரைபிரபலங்களை பாஜக பிரச்சாரத்தில் பயன்படுத்தி மக்களை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications