விஜய் துணிச்சலானவர்.. யாரும் எதிர்ப்பு குரல் கொடுக்ககூடாது.. திமுகவை சட்ட ரீதியாக பார்த்துக்கலாம் – டிகே சிவக்குமார்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ''பெங்களூர் வருவதாக கூறிய தமிழக முதல்வர் விஜய்யின் துணிச்சலான முடிவை நான் பாராட்டுகிறேன். ஆனால், ஒரு சுமூகமான சூழலில் நாம் சந்திப்பதே சிறந்தது என்று நான் கேட்டுக்கொண்டேன். இதனால் அவர் தனது பயணத்தை ஒத்திவைத்தார். ஏனென்றால் எனது நண்பர்களுக்கு எதிராக யாரும் முழக்கமிடுவதை நான் விரும்பவில்லை'' என்று கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் கூறினார். அதேவேளையில் கர்நாடகாவிற்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு பற்றியும் டிகே சிவக்குமார் கருத்து தெரிவித்தார்.

vijay-is-a-courageous-leader-dk-shivakumar-praises-tamil-nadu-cm

தமிழகம்- கர்நாடகா இடையே நிலவும் காவிரி பிரச்சனை பற்றி விவாதிக்க பெங்களூரில் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் இன்று அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு டிகே சிவக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அரசியலுக்கு அவர் புதியவராக இருந்தாலும், அவர் ஒரு துணிச்சலான தலைவர். அவரது துணிச்சலான முடிவுக்கு நான் பாராட்டுகளை தெரிவித்தேன். அரசியல் ரீதியாக எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர் கர்நாடகாவுக்கு வர விரும்பினார். ஆனால், ஒரு சுமூகமான சூழலில் நாம் சந்திப்பதே சிறந்தது என்று நான் கேட்டுக்கொண்டேன்.

ஏனென்றால் எனது நண்பர்களுக்கு எதிராக யாரும் முழக்கமிடுவதை நான் விரும்பவில்லை. நாம் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும். நாம் இணைந்து வாழவும் பணியாற்றவும் வேண்டும். என்னைப் பொறுத்தவரை தமிழகமும் ஒன்றுதான், கர்நாடகாவும் ஒன்றுதான். இறுதியில், நாம் அனைவரும் ஒன்றுதான்.

மேகேதாது அணை கட்டப்பட்டால், கர்நாடகாவை விட தமிழகத்திற்கே சுமார் 90 சதவீதப் பலன் கிடைக்கும். அந்த நீரை எந்த கட்டத்திலும் பெங்களூருவுக்கு திருப்பிவிட முடியாது. யார் வேண்டுமானாலும் திட்டத்துக்கான இடத்தை பார்வையிட்டு உண்மைகளை புரிந்து கொள்ளலாம்.
மாநிலத்தின் நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் சட்டத்தையும் கர்நாடகா தொடர்ந்து மதிக்கும்.

இனிமேலும் காலத்தை வீணடிக்காமல் நாம் முன்னேற வேண்டும். இது தமிழ்நாடு அதிக நீரைப் பெறுவது அல்லது கர்நாடகா குறைவான நீரைப் பெறுவது பற்றியது அல்ல. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, சுமூகமாக இப்பிரச்சினையைத் தீர்க்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேகேதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையில் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏதுமில்லை. ஆவணங்கள் தொடர்பான சின்ன சின்ன சிக்கல்கள் மட்டுமே உள்ளன. மேகதாது அணை திட்டத்தின் மூலமாக 9 டிஎம்சி தண்ணீரை தனி பயன்பாட்டுக்காக பயன்படுத்த முடிவு செய்திருந்ததாக அறிக்கையில் கூறியிருந்தோம். அதனை குடிநீருக்காக மட்டுமே ஒதுக்கீடு செய்யுமாறும், அதனை குறிப்பிடும்படியாகவும் மத்திய அரசு கூறியது. தற்போதுஅந்த 9 டிஎம்சி நீர் குடிநீர் தேவைக்காக மட்டுமே என்பது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், அதை நாங்கள் அளிப்பதோடு தேவையான ஆவணங்களையும் சமர்ப்பிப்போம்,'' என்றார்.

இந்த சமயத்தில், தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 3,500 கன அடி நீரைத் திறந்துவிடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தை நாடியிருப்பது பற்றி டிகே சிவக்குமார் கருத்து தெரிவித்தார்.

அப்போது அவர், '' போதிய மழையின்மை உள்பட பிற கடினமான சூழலிலும் மாநில அரசு அந்த உத்தரவை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருக்க உரிமை உண்டு. நாங்கள் ஒவ்வொரு நகர்வுகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்துள்ளது. நாங்கள் எங்கள் சட்டக் குழுவுடன் கலந்தாலோசித்து, நீதிமன்ற விவகாரங்களைக் கையாள்வோம். மக்களின் உணர்வுகளையும் நாட்டின் சட்டத்தையும் நாங்கள் மதிக்கிறோம். பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படி நாங்கள் தண்ணீரைத் திறந்து விடுகிறோம். அதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று நம்புகிறேன். மேலும் அண்டை மாநிலத்துடன் சுமூகமான உறவை பேணும் அதே வேளையில், கர்நாடகாவின் நலன்களை பாதுகாப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+