‛விஜய் நேர்மையானவர்’.. தமிழக வெற்றிக் கழகத்தால் பூரித்த நடிகர் சிவராஜ் குமார்! ஹைலைட் வார்த்தை
பெங்களூர்: தமிழக வெற்றிக் கழகம் மூலம் அரசியலில் என்ட்ரியாகி உள்ள நடிகர் விஜயிடம் நேர்மை இருக்கிறது எனக்கூறி பாராட்டியுள்ளார் கன்னட நடிகர் சிவராஜ் குமார்.
கர்நாடகாவில் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த மாதம் 26 ம் தேதி முதற்கட்டமாக 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. வரும் 7 ம் தேதி அடுத்தக்கட்டமாக 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் சிவமொக்கா தொகுதியில் நடிகர் சிவராஜ் குமாரின் மனைவி கீதா சிவராஜ் குமார் போட்டியிடுகிறார். சிவமொக்கா என்பது கீதாவின் சொந்த மாவட்டமாகும். இங்கு தான் கீதாவின் தந்தையும், முன்னாள் முதல்வருமான பங்காரப்பாவின் சொந்த ஊர் உள்ளது.
சிவமொக்காவில் தற்போது சிட்டிங் எம்பியாக கர்நாடகா பாஜகவின் முகமாக அறியப்படும் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா உள்ளார். அவரை எதிர்த்து தான் கீதா சிவராஜ் குமார் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் தான் சிவமொக்கா தொகுதியில் மனைவி கீதாவை வெற்றி பெற வைக்க நடிகர் சிவராஜ் குமார் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தான் நடிகர் விஜயின் அரசியல் என்ட்ரி பற்றி நடிகர் சிவராஜ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரிடம், ‛‛நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக கூறியுள்ளார். அதை எப்படி பார்க்கிறீர்கள்? நடிகர்கள் அரசியலுக்கு வருவதை நல்ல விஷயமாக பார்க்கிறீர்களா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு நடிகர் சிவராஜ்குமார், ‛‛விஜயிடம் நல்ல கொள்கை, நோக்கம் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவருடைய பார்வை பிடித்திருக்கிறது. அவரது பேச்சை கேட்டு இருக்கிறேன். அவரிடம் நேர்மை இருப்பதாக தோன்றுகிறது. அவரது முகம், பேச்சில் ஒரு நேர்மை இருக்கிறது'' என்றார். நடிகர் சிவராஜ் குமார் தற்போது தமிழ் படங்களில் அதிகமாக நடிக்க தொடங்கி உள்ளார்.
சமீபத்தில் நடிகர் ரஜினியின் ஜெயிலர் மற்றும் நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படங்களில் சிவராஜ் குமார் நடித்திருந்தார். அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்து இருந்தது. இந்நிலையில் தான் நடிகர் விஜயின் அரசியல் வருகையை அவர் வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சாதனையா? வேதனையா? விஜய் முதல்வராகி 30 நாள்! அதிரடி ஆக்ஷன்களும்.. அரசின் முன் நிற்கும் சவால்களும்! -
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
தாம்தக்க.. தையத்தக்க.. திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி? விஜய் போட்டு வைத்த கணக்கு! என்ன? -
தூத்துக்குடிக்கு வர இருந்த கப்பல் முதலீடு! கண்டுக்காத தமிழக அரசால்..ஆந்திரா போன மசகான் டாக் நிறுவனம் -
விஜய், சுந்தர் சியின் முடிவு.. சூழ்ச்சி இருக்கு! சொல்லுறதை நம்ப முடியல! ரகசியங்களை உடைத்த நடிகர் இளவரசு -
பாஜக கோபத்திற்கு ஆளாக நேரிடும்! இந்தியா கூட்டத்திற்கு தவெக போகாதது ஏன்? விஜய் எடுத்த பயங்கர முடிவு? -
சிக்கும் செந்தில் பாலாஜி? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தோண்டப்படும் டாஸ்மாக் முறைகேடு! -
உள்துறை பொறுப்பை வேறு அமைச்சருக்கு ஒப்படைக்க முதல்வர் விஜய் திட்டம்? தமிழக அரசியலில் பரபரப்பு! -
கிடைக்கிற கேப்பில் எல்லாம்.. அடிச்சு தூக்கிய விஜய்.. வடக்கின் அஸ்திவாரத்தையே ஆட்ட போகும் பிளான் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஜய்க்கு அடுத்த அக்னி பரீட்சை.. அமைச்சர்களுக்கு முக்கிய அசைன்மென்ட்! இடைத் தேர்தலுக்கு ரெடியான தவெக -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம்












Click it and Unblock the Notifications