பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னாது! டுவிட்டரில் வைரலாகும் படம் விக்ரம் லேண்டரின் படமா?.. அது எப்படி சாத்தியம்? இஸ்ரோ மறுப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Viral photo is not Vikram Lander

    பெங்களூர்: டுவிட்டரில் வைரலாகும் புகைப்படம் விக்ரம் லேண்டரின் படம் அல்ல என்றும் அது அப்பல்லோ 15 லேண்டிங் ஆன தளம் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 1 விண்கலம் அங்கு உறைப்பனிகள் காணப்படுவதாக புகைப்படங்களை வெளியிட்டது. அப்படியெனில் நிலவில் தண்ணீர் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் 2 என்ற விண்கலம் கடந்த 22-ஆம் தேதி அனுப்பப்பட்டது. இதில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என்ற மூன்று அமைப்புகள் உள்ளன. இதில் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் ஆர்பிட்டரிலிருந்து 2-ஆம் தேதி பிரிந்தது.

    சென்னை திரும்பினார் முதல்வர்.. வந்ததும் வராததுமாக எதிர்க்கட்சிகளுக்கு பதிலடியும் கொடுத்தார்சென்னை திரும்பினார் முதல்வர்.. வந்ததும் வராததுமாக எதிர்க்கட்சிகளுக்கு பதிலடியும் கொடுத்தார்

    விஞ்ஞானிகள்

    விஞ்ஞானிகள்

    சந்திரனில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில் 2.1 கி.மீ. உயரத்தில் லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்த விஞ்ஞானிகள் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயன்றனர்.

    படம் பிடித்த ஆர்பிட்டர்

    படம் பிடித்த ஆர்பிட்டர்

    ஆனால் முடியவில்லை என்றாலும் லேண்டருடன் தொடர்பு கொள்ளும் வகையில் விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் லேண்டர் இருக்கும் இடம் குறித்து நிலவுக்கு 100 கி.மீ. தூரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் ஆர்பிட்டர் கடந்த ஞாயிற்றுக்கிழமை படம் பிடித்து அனுப்பியது.

    ஆர்பிட்டரின் தூரம் குறைப்பு

    ஆர்பிட்டரின் தூரம் குறைப்பு

    இதையடுத்து நிலவின் தரை பகுதியில் விழுந்துள்ள லேண்டரை துல்லியமாக புகைப்படம் எடுக்க தெர்மல் இமேஜ் கேமரா பொருத்தப்பட்டிருப்பதால் ஆர்பிட்டரின் தூரத்தை 50 கி.மீ. ஆக குறைக்க விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இந்த பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வைரல் புகைப்படம்

    வைரல் புகைப்படம்

    இந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் கிடக்கும் விக்ரம் லேண்டர் போன்ற ஒரு படம் டுவிட்டரில் வைரலாகியுள்ளது. அதை இஸ்ரோ தலைவர் கே சிவன் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்தன. இது விக்ரம் லேண்டர் அல்ல என இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    ஆர்பிட்டர்

    ஆர்பிட்டர்

    சமூகவலைதளங்களில் பரவும் புகைப்படம் அப்பல்லோ 15 இறங்கு தளமாகும். ஒரு சுற்றுப்பாதை அதே இடத்திற்கு வர 3 நாட்கள் ஆகும். எனவே லேண்டரின் இருப்பிடத்தை ஞாயிற்றுக்கிழமைதான் ஆர்பிட்டர் படம் பிடித்தது. எனவே நேற்று திங்கள்கிழமை இன்னொரு படம் என்பது வாய்ப்பே இல்லை என இஸ்ரோ தெரிவித்தது.

    English summary
    Viral photo is not Vikram Lander. That's Apollo landing site, ISRO explains as it goes viral in social medias.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X